” மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி .. நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கதிபனாகி .. நிறைதனம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும் இறையவன் குருவியாழன் இருமலர்ப்பாதம் போற்றி “
(நல்வாழ்க்கை அமையும்)
(நல்வாழ்க்கை அமையும்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று வாக்கிற்கும் .. அறிவுக்கும் அதிதேவதையான குருபகவானை வழிபடுவது சாலச்சிறந்தது .. தங்களனைவரது கிரகதோஷங்கள் யாவும் நீங்கி .. எடுத்த காரியங்களில் வெற்றியும் .. உயர்பதவிகளும் .. வியாபாரத்தில் அதீத லாபமும் பெற்றிடவும் குருபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் வ்ருஷ்பத்வஜாய வித்மஹே !
க்ருணிஹஸ்தாய தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ப்ரயதிதேவதா ஸகித
ப்ரகஸ்பதி க்ரஹாய நமஹ !!
க்ருணிஹஸ்தாய தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ப்ரயதிதேவதா ஸகித
ப்ரகஸ்பதி க்ரஹாய நமஹ !!
” குருபார்க்க கோடி நன்மை “ என்பது பழமொழி .. அத்தனை சக்திவாய்ந்தது குருவின் பார்வை .. இவர் அமரும் வீட்டை விட .. பார்க்கும் வீட்டிற்குதான் யோகம் அதிகம் .. நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப்போற்றக்கூடிய சுபக்கிரகம் குரு ஆவார் .. தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர் .. அறிவு .. ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர் .. தனம் .. புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குருபகவான்
நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இருயோகமும் தங்குதடையின்றி அமையும் ..
நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இருயோகமும் தங்குதடையின்றி அமையும் ..
பிரம்மாவின் பேரர் ஆங்கீரச மகரிஷி அவருடைய மகனாகப் பிறந்தவர் குரு என்று போற்றப்படும் வியாழபகவான் ..இவர் தேவகுருவாக விளங்குபவர் .. குரு அருட்பார்வை ஒருவருக்கு ஞானத்தை .. கல்வியையும் கலைகளையும் அருளும் .. குரு எனப்படும் வியாழன் சூரியனைச் சுற்றிவர பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும் ..
இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர இவரது பார்வை மிகவும் சக்திவாய்ந்தது .. பலதோஷங்களையும் அகற்றிவிடும் வல்லமை கொண்டது .. “ அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு “ என்ற ஜோதிடவாக்கு இவரை குறிப்பதுதான் ..
சமூக அந்தஸ்து .. ஆன்மீக ஈடுபாடு .. தர்மகாரியங்கள் .. நற்பணி நிலையங்கள் .. ஆதரவற்றோர் .. முதியோர் இல்லங்கள் அமைத்தல்.. பள்ளி .. கல்லூரிகள் கட்டுதல் .. வங்கி .. அரசுகஜானா போன்ற இடங்களில் வேலைகிடைத்தல் .. நிதி .. நீதித்துறையில் பணிபுரிவது .. நீதிபதி .. அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குருபகவான் ..
வியாழனை குரு என்றும் அழைப்பது பிரசித்தம் தேவர்களின் குருவாக விளங்கும் பிரஹஸ்பதியும் இவரே! ஆங்கிலத்தில் ஜுபிடர் என்பார்கள் .. ஆங்கிரஸ மகரிஷிக்கும் சிரத்தாதேவிக்கும் மகனாக பிறந்தவர் ..
குருவின் நிறம் - பொன்னிறம்
வாகனம் - மீன்
தானியம் - கொண்டைக்கடலை
மலர் - முல்லை
வஸ்திரம் - மஞ்சள் ஆடை
ராசிக்கல் - புஷ்பராகம்
குருவின் நிறம் - பொன்னிறம்
வாகனம் - மீன்
தானியம் - கொண்டைக்கடலை
மலர் - முல்லை
வஸ்திரம் - மஞ்சள் ஆடை
ராசிக்கல் - புஷ்பராகம்
நான்குகரங்களை உடைய வியாழபகவான் மூன்றில் ஜபமாலை .. யோகதண்டம் .. கமண்டலம் எந்தி இருப்பார்
ஒருகரம் அபயஹஸ்தமுத்திரையுடன் இருக்கும் .. குருபகவானுக்கு வியாழனறு மஞ்சள் கலந்த நீரினால் அபிஷேகம் செய்வித்து கடலை நிவேதனம் செய்து குருபகவானுக்கு விருப்பமான ‘ அடானா ராகத்தில் ‘ கீர்த்தனைகள் பாடி .. குருஸ்லோகம் சொல்லி வழிபட்டால் குரு கிரகதோஷங்கள் நீங்கி வாழ்வில் சுகம் உண்டாகும்
ஒருகரம் அபயஹஸ்தமுத்திரையுடன் இருக்கும் .. குருபகவானுக்கு வியாழனறு மஞ்சள் கலந்த நீரினால் அபிஷேகம் செய்வித்து கடலை நிவேதனம் செய்து குருபகவானுக்கு விருப்பமான ‘ அடானா ராகத்தில் ‘ கீர்த்தனைகள் பாடி .. குருஸ்லோகம் சொல்லி வழிபட்டால் குரு கிரகதோஷங்கள் நீங்கி வாழ்வில் சுகம் உண்டாகும்
குருபகவானைப் போற்றுவோம் ! குருபார்வை பெற்று சகலதோஷங்களும் நீங்கப்பெறுவோமாக !
” ஓம் ஸ்ரீ குருவே நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
” ஓம் ஸ்ரீ குருவே நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment