GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " KAAMADA EKADASI " .. FASTING ON THIS KAAMADA EKAADASI .. OUR SEVERAL SINS CARRIED FROM SEVERAL PREVIOUS BIRTHS WILL BE BURNED TO ASHES .. " OM NAMO NAARAAYANAAYA "PANVEL BALAGAN PATHAM POTRI. GURUVE SARANAM SARANAM





மேலானவற்றுக்கெல்லாம் மேலானவன் !
அரியதற்கும் மேலாக அரிதானவன் ! 
மிகுந்த சக்தி உள்ளவன் .. நிரந்தரமானவன் எவராலும் பக்தியால் அடையக்கூடியவன் ! ஒப்பற்றவன் முன்னைக்கும் முந்தையவன் ஒளிமயமானவன் .. ஞானிகளுக்கெல்லாம் முதன்மையான பரமஞானஸ்வரூபனான அந்த விஷ்ணுவை நமஸ்கரிக்கின்றேன் ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை தங்கள் இல்லம்தோறும் அள்ளிவழங்கிடும் வெள்ளிக்கிழமையாகிய இன்று 
ஸ்ரீமன் நாராயணனனுக்கு உகந்த ஏகாதசித் திதியும் கூடிவருவது சிறப்பாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று சுபீட்சமான வாழ்வு மலர்ந்திட விஷ்ணுபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
சுக்லபக்ஷ்த்தில் வரும் ஏகாதசி திதியை “ காமதா ஏகாதசி”
என்று அழைக்கிறார்கள் ..இவ் ஏகாதசி விரதமானது அனுஷ்டிப்பவர்களின் சகலவிதமான பாவங்களையும் நீக்கி மோட்சப் பிராப்தியை அளிக்கும் சக்திவாய்ந்தது .. உலர்ந்த விறகானது அக்னியின் தொடர்பால் எப்படி எரிந்து சாம்பலாகிறதோ அதேபோல் “ காமதா ஏகாதசி “ விரதத்தின் புண்ணியபலனின் பிரபாவம் சகலவிதமான பாபங்களையும் நீக்குவதோடு புத்திர பிராப்தியையும் அளிக்கிறது ..
இவ்விரதம் அனுஷ்டிப்பவர்கள் கர்மவினையின் காரணமாக இழிநிலை பிறவி எடுத்தவர் .. அதிலிருந்து விடுதலை பெறுவதுடன் இறுதியில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர் ..
புராணவரலாறு ..
பழங்காலத்தில் போகீபுர் என்னும் நகரை புண்டரீகன் என்னும் அரசன் ஆண்டுவந்தான் அவனது ஆட்சியில் நகரானது அனைத்து வளங்களும் பெற்று ஐஸ்வர்யத்துடன் விளங்கியது .. அந்நகரில் வசித்துவந்த கந்தர்வ தம்பதியினர்களான லலித் மற்றும் லலிதா சங்கீதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர் .. கற்பனையில் கூட பிரிவு என்பதை ஏற்க இயலாதளவிற்கு இருவரும் அன்புமிக்கவர்களாகத் திகழ்ந்தனர் ..
ஒருமுறை அரசன் புண்டரீகன் இசையரங்கத்தில் கந்தர்வர்களுடன் அமர்ந்து சங்கீதத்தை ரசித்துக்கொண்டிருந்தான் .. அங்கு மற்ற கந்தர்வர்களுடன் சேர்ந்து கந்தர்வனான லலித்தும் பாடி மகிழ்வித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவனுடைய மனைவி ஞாபகம் வரவே சுருதி விலகி பாடலை தவறாக பாடியதன் காரணமாக அரசனும் அவனை நரமாமிசம் தின்னும் ராட்சஸனாக மாறும்படி சபித்தான் ..
சாபம்பெற்ற கந்தர்வன் லலித் அக்கணமே கோரவடிவுடைய ராட்சஸனாக மாறி காட்டில் இருந்துகொண்டே அநேக பாபங்களை செய்ய ஆரம்பித்தான் .. அவனுடைய மனைவியும் அவன் போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்து சென்று அவனுடைய நிலையை எண்ணி வருந்தினாள் ..
இறுதியில் விந்தியாசல் பர்வதத்தை அடைந்து சிருங்கிமுனிவருடைய ஆலோசனைப்படி 
“ காமதா ஏகாதசியை ” முறைப்படி அனுஷ்டித்து அவ்விரதபுண்ணியபலனை தன் கணவருக்கு அளித்து அவனை அதிலிருந்து மீட்டாள் .. காமதா ஏகாதசியின் பிரபாவத்தால் இருவரும் முன்பைவிட மிகவும் செழிப்புடனும் அன்புடனும் வாழ்ந்து இறுதில்யில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெற்றனர் ..
இவ்விரத கதை மற்றும் மஹாத்மியத்தை கேட்டோ படித்தோ வருபவர்களுக்கு அத்யந்த பலனை அளிக்கக்கூடியது .. கருணைமிக்கவனை மனதார போற்றுவோம் ! கவலைகளை துரத்துவோம் ! 
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

No comments:

Post a Comment