PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMI SARANAM ..GURUVE SARANAM SARANAM....WISH YOU ALL A HAPPY WEEKEND & A DIVINE SADURTHI TOO ..MAY LORD GANESHA REMOVE ALL THE OBSTACLES & SINS FROM YOUR LIFE & SHOWER YOU WITH SUCCESS IN ALL YOUR ENDEAVORS .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "


” இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே ! பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருபவனே ! தேவர்களுக்கெல்லாம் தேவனே ! கருணைமிக்கவனே ! யானைமுகத்தோனே!
அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தை தருபவனே ! எல்லையில்லாத பரம்பொருளே !
விநாயப்பெருமானே ! உன் திருவருடிகளை சரணடைந்து நின் அருளை வேண்டுகின்றேன் ! தந்தருள்வாயாக “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்றுமாலைவரை சதுர்த்தித் திதி வருவதால் கணங்களுக்கெல்லாம் அதிபதியாகிய விநாயகப்பெருமானைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. அனைத்து சங்கடங்களையும் களைந்து .. நினைத்த காரியங்கள் மற்றும் தொடங்கும் செயல்கள் யாவும் இலகுவாக முடிந்திடவும் விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
விநாயகர் முழுமுதற்கடவுளாவார் ! விநாயகர் என்ற சொல்லுக்கு “ தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் “ என்று பொருளாகும் .. விக்னங்களுக்கு அதிபதியான அவர் நாம் தொடங்கும் சுபகாரியங்களுக்கு இடையூறு ஏற்படாமல் அருளாசி புரிகிறார் ..
சங்கடஹர சதுர்த்தி என்றால் .. 
சங்கம் என்றால் - சேருதல் என்று பொருள் .. கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங் + கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது .. இந்த சங்கஷ்டமே பின்பு சங்கடமாக மருவி உருமாற்றம் பெற்றுவிட்டது .. சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும் ..
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாளே சங்கடஹர சதுர்த்தியாகும் .. இது இருள்சூழும் மாலை நேரத்தில் வரும் .. நமக்கு வரும் துன்பங்கள் .. தடைகளை .. கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்புமிக்க விரதமாகும் ..
மனிதருக்கு மட்டும் அல்ல .. தெய்வங்களுக்கும் .. தேவர்களுக்கும்கூட கஷ்டங்கள் வந்தபோது அவர்கள் பிள்ளையாரை வணங்கி நலம் பெற்றுள்ளனர் .. என்பதனை புராணவரலாறு தெரிவிக்கின்றன .. விநாயகர் அகவல் .. விநாயகர் கவசம் ,, காரியசித்திமாலை பாடல்களைபாடி விநாயகரை வழிபடலாம் ..
இதில் எடுத்த செயல்கள் வெற்றிபெறச் செய்யும் தனிச் சிறப்புடையது
காரியசித்திமாலை .. கேட்டவரம் தரும் தனிச்சிறப்புடையது இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றி பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும் ..
வளர்பிறை சதுர்த்தித் திதியை பார்த்தால் தீங்குவிளையும் .. பகவான் கிருஷணர் .. செவ்வாய் .. புருகண்டி முனிவர் .. ஆகியோர் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து விநாயகரின் அருளை பெற்றுள்ளனர் .. முற்பிறவியில் நாம்செய்த வினையின் பயனால் நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வரும் அவை நீங்க சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டு எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் பெறுவீர்களாக ..
” ஓம் ஹேரம்பாய மதமோதித மமசங்கட!
நிவாரயே ! ஸ்வாஹா ! 
ஓம் விக்னேஷ்வராய நமஹ ! 
வாழ்க வளமுடமும் என்றும் நலமுடனும் .. !!
 

No comments:

Post a Comment