” நாளென்செயும் வினைதான் என்செயும் எனைநாடிவந்த கோளென்செயும் ! கொடுங்கூற்றென்செயும் ! குமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்வந்து தோன்றிடினே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
திங்கட்கிழமையாகிய இன்று சோமவார விரதமும் .. சஷ்டித் திதியும் கூடிவருவது சிறப்பு .. தங்கள் அனைத்து துன்பங்கள் .. துயரங்கள் நீங்கிடவும் .. நல்ல தொழில்வாய்ப்பு பெற்றிடவும் .. கடன் தொல்லையின்றி மனநிம்மதியுடன் இனிதே வாழ எல்லாம் வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படியாகக் கொண்ட காலக்கணிப்பு முறையில் 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரும் நாளை குறிக்கின்றது .. இந்த நாட்கள் பொதுவாக திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது .. அமாவாசை நாளுக்கும் .. பௌர்ணமி நாளுக்கும் அடுத்துவரும் ஆறாவது திதியே சஷ்டி ஆகும் ..
முருகப்பெருமானுக்கு பலவிரதங்கள் இருந்தாலும் சஷ்டி விரதம் மிகவும் சிறப்புவாய்ந்தது .. சஷ்டித் தினத்தன்று முருகப்பெருமானை நாம் எந்தளவுக்கு மனமுருகி பிரார்த்திக்கின்றோமோ அந்தளவுக்கு கந்தனின் கருணையிப் பெறமுடியும் ..
முழுமுதற் கடவுளாக கலியுகக் கந்தபிரான் போற்றப்படுகின்றார் .. மனிதமனம் விரதத்தின்போது தனித்து .. விழித்து .. பசித்து இருந்து ஆறுவகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகிறது .
தூய உள்ளம் .. களங்கமற்ற அன்பு .. கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக “ கந்தசஷ்டி “ விரதம் அமைகிறது ..
தூய உள்ளம் .. களங்கமற்ற அன்பு .. கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக “ கந்தசஷ்டி “ விரதம் அமைகிறது ..
அசுரசக்திகளின் ஆணவம் .. கன்மம் .. மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம் .. கோபம் .. பேராசை .. செருக்கு .. மயக்கம் .. பெருமை ஆகியவைகளை அழித்து .. முற்றுணர்வு
வரம்பிலாற்றல் .. தன்வயமுடைமை .. வரம்பின்மை .. இயற்கையுணர்வு .. பேரருள் ஆகிய தேவகுணங்களை நிலைநாட்டியதால் கந்தசஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது ..
வரம்பிலாற்றல் .. தன்வயமுடைமை .. வரம்பின்மை .. இயற்கையுணர்வு .. பேரருள் ஆகிய தேவகுணங்களை நிலைநாட்டியதால் கந்தசஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது ..
மாணவர்கள் படிப்பிற்கும் .. குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும் .. கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழ்க்கைத்துணையாக அடையவேண்டியும் .. குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் .. இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர் ..
கலியுகவரதனும் .. கண்கண்ட தெய்வமுமாகிய கந்தசுவாமியின் திருவருளினால் பூரணமான ஆனந்தப்பெருவாழ்வு வாழ்வோமாக !
“ ஓம் சரவணபவாய நமஹ “ ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் சரவணபவாய நமஹ “ ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment