PANVEL BALAGANE POTRI POTRI...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HIS DIVINE BLESSINGS BRING YOU ETERNAL BLISS & FULFILL ALL YOUR DESIRES .. " OM MURUGA "



 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் !
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்!
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் !
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
செவ்வாய்க்கே அதிபதியும் .. கேட்டவரங்களை கேட்டவாறே வாரிவழங்கிடும் கலியுகவரதனாம் கந்தப்பெருமானைத் துதித்து தங்களனைவரது வேண்டுதல்கள் யாவும் வேண்டியபடியே நிறைவேறவும் நல்லாரோக்கியமும் செவ்வாயின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் ஏற்றத்தைக்காணவும் முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
முருகன் தமிழ்க்கடவுள் .. முருகனே தமிழ்மொழியை முதன்முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினார் என்பது வரலாறு .. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் திமிழிலேயே முருகன் உபதேசித்தான் .. 
ஞானமே உடலாகவும் .. இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும் இப்பெரிய உலகமே கோவிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன் .. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் நூறாயிரம் சூரியன்கள் ஒரேகாலத்தில் ஒளிவீசுவது போன்ற பேரழகு வாய்ந்த தெய்வீக வடிவம் கொண்டவன் முருகன் ..
முருகன் ஒரு தொகுப்புத் தெய்வம் .. முருகனை வணங்கினால் பலகடவுளரை வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம் .. எனவே முருகன் வழிபாடு மிகச்சிறப்புடையது .. முருகன் தன் அடியவர்கள் வேண்டும் நலங்களை எல்லாம் அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்தருளும் பெருந்தன்மை வாய்ந்தவன் ..அவன் நம் உள்ளத்தைக் கவரும் பண்புடையான் என்று உணர்ந்து முருகனை சரணடைந்தால் அவன் நம் துன்பத்தைப் போக்குவான் .. நம்துன்பத்தை அழிப்பான் .. முருகனை அன்புடன் வழிபட்டு முருகா ! முருகா ! என கூறித்தியானிப்பவர்கள் என்றும் குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள் .. அவர்களை ஒருபோதும் எத்தகைய துன்பமும் அணுகாது ..
முருகனைப் போற்றுவோம் ! தங்களனைவருக்கும் முருகனருள் முன் நிற்பதாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: 1 person, night



No comments:

Post a Comment