PANVEL BALAGANE SARANAM SARANAM....GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE THIRUVONAM STAR TOO .. SINGING THE GLORY OF LORD VISHNU'S NAME ON THIS DAY GRACIOUSLY GRANTS ALL YOUR DESIRES & LONG LIFE & ABUNDANT WEALTH TOO .. " OM NAMO NAARAAYANAAYA "


 என்னப்பன் எனக்காயிருளாய் என்னைப் பெற்றவனாய் ! பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய் ! மின்னப்பொன்மதிழ் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தவப்பன் தன்னொப்பாரிலப்பன் ! தந்தனன் தந்தாள் நிழலே “ 
( திருவோண நட்சத்திரத்தன்று ஒப்பிலியப்பனைத் துதித்து சொல்லவேண்டிய சிறப்பான ஸ்லோகம்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
குருவருளும் .. இறையருளும் கூடிய இன்நாளில் மஹாவிஷ்ணுவிற்கு உகந்த திருவோண நட்சத்திரமும் கூடிவருவது சிறப்பு .. இன்நாளில் ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தை மனதாரத் துதித்து .. துன்பங்கள் களைந்து .. பாவங்களைப் போக்கி சகலசௌபாக்கியத்துடனும் மகிழ்வோடும் வாழ பகவான் அருள்புரிவாராக ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளன்று பெருமாளை வழிபட்டு விரதங்காப்பது சிறப்பாகும் .. இதனை “ ஸ்ரவண விரதம் “ என்றழைப்பார்கள் ..
தனிமனிதனின் உள்ளத்தைத் தூய்மையாக்கி ஆன்மீக ஆற்றலைத் தரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து வரும் அன்பர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி வாழ்வில் அமைதி நிலவும் .. உறவினர் கொண்ட பகை அகலும் .. பகைவரும் நண்பராவர் .. அனைத்து துன்பங்களும் நீங்கும் ..
108 திவ்வியதேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோவிலில் மாதாமாதம் இந்நாளில் “ ஸ்ரவணம் “ என்ற விழா பிரசித்தம் ..
“ மாம் ஏகம் சரணம் வ்ரஜ “ - என்னை சரணடைந்த்தால் உன்னை நான் காப்பேன் “ .. என்ற சரமச்லோகப் பகுதி எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது ..
புராணவரலாறு -
ஒருமுறை மஹாலக்ஷ்மியின் அம்சமான பூமாதேவி தானும் பெருமாளின் மார்பில் இடம்பெறவேண்டியபோது .. பூமியில் மார்கண்டேய மகரிஷியின் மகளாக பிறக்க அருள்புரிந்தார் விஷ்ணுபகவான் .. மார்கண்டேய மகரிஷியிடம் அவர் மகளாகப் பிறந்துள்ள “துளசியை” தனக்கு மணமுடித்துத் தரும்படி வேண்டினார் வயதான தோற்றத்தில் வந்த மஹாவிஷ்ணு .. அந்த வயோதிபருக்கு தன் சிறியவயது மகளைக் கொடுக்க விருப்பமில்லாததால் .. “ என்மகளுக்கு சரியாக உப்புப் போட்டுகூட சமைக்கத்தெரியாது அவளைத் திருமணம் செய்வது தங்களுக்கு சௌகரியப்படாது “ என்று ஏதோ ஒருகாரணத்தைக் கூறி மறுத்தவரிடம் .. 
பெருமாளோ ! “ அதானாலென்ன ! இனிமேல் நான் உப்பேபோடாமல் அனைத்தையும் உண்கின்றேனே “ என்று வாக்களித்து .. விடாமல் பூமாதேவியை மணந்து கொண்டுவிட்டார் ..
அதன்பிறகே வந்தவர் மஹாவிஷ்ணு என்பதனை அறிந்த மஹரிஷி மகிழ்ச்சி அடைந்தார் .. இதனால் அன்றிலிருந்து உப்பிலியப்பன் .. உப்பு இல்லாத அப்பன் என்றும் .. அழைக்கப்பட்டு அந்த கோவிலில் படைக்கபடும் எந்த ஒரு உணவிலும் உப்பு சேர்க்கப்படுவதில்லை .. ” தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலார் ” என்ற பதத்திலேயே ஒப்பிலா அப்பன் ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கப்படுகிறார் ..
ஒவ்வொருமாத திருவோண நட்சத்திரத்தன்று இக்கோவிலில் அகண்டதீபம் .. வால்தீபம் ஏற்றப்படுகின்றன .. இதனை தரிசிக்கும் மக்களுக்கு குறைவில்லாத செல்வமும் .. அனைத்து துயரங்களும் நீங்கும் என்றும் நம்பிக்கை உள்ளது ..
ஓம் நமோ நாராயணாய ! ஓம் நமோ நாராயணாய ! 
ஓம் நமோ நாராயணாய ! என்று மீண்டும் .. மீண்டும் சொல்லி ஓர் குழந்தையைப் போல் நம்மை அரவணைக்கும் திருமாலின் திவ்யபாதக்கமலங்களில் சரணடைவோமாக ! 

வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: 1 person



No comments:

Post a Comment