” எங்களை வாழவைக்கும் எங்களின் அன்னை நீயே !
எங்களின் உயிரில் ஆத்மா என்றிடும் இறைவி நீயே !
பொங்கொளி பரப்பும் தாயே ! புனிதமே கோபிகொண்ட மங்கல அன்னை நீயே ! மலரடி பணிகின்றோமே “
எங்களின் உயிரில் ஆத்மா என்றிடும் இறைவி நீயே !
பொங்கொளி பரப்பும் தாயே ! புனிதமே கோபிகொண்ட மங்கல அன்னை நீயே ! மலரடி பணிகின்றோமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை தங்கள் இல்லம்தோறும் அள்ளி வழங்கும் வெள்ளிக்கிழமையாகிய இன்று . தீமை என்னும் தாரித்ரயத்தை அழித்து.. ஞானம் எனும் ஐஸ்வர்யத்தையும் ..பொருட்செல்வத்தையும் .. இகவாழ்வில் வேண்டும் வரங்கள் யாவும் தங்களனைவருக்கும் வேண்டியபடியே கிடைத்திட
அன்னை மஹாலக்ஷ்மியைப் பிரார்த்திக்கின்றேன் ..
அன்னை மஹாலக்ஷ்மியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே !
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்
திருப்பாற்கடலில் தோன்றியவள் அன்னை மஹாலக்ஷ்மி .. அவளே சகல செல்வங்களுக்கும் அதிபதியானவள் .. சர்வமங்களங்களையும் அள்ளித்தருபவள் .. அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத்தேனை அளிப்பவள் .. ஆயிரம் இதழ்கொண்ட தாமரைமலரில் வாசம் செய்பவள் .. பள்ளிகொண்ட பரந்தாமனின் திருமார்பினை அணைந்தவள் ..
ஒளிமயமான வாழ்க்கைக்கு ஒளிமயமானவளை வழிபடுவது சிறப்பு .. நம் மனதில் மண்டிக்கிடக்கும் அறியாமை எனும் இருளை அகற்றி .. பயம் நீக்கி .. அறிவொளி மிளிர எமை காத்தருள்பவளும் அன்னையே !
” உட்கார்ந்தவன் எழுவதன் முன்னே ! நின்றவன் நெடுந்தூரம் போவான் “ என்பது முதுமொழி . அதனால் தன் அடியார் அழைக்கும் முன்னரே ! ஓடிவந்து அருள் செய்வதற்காகவே விழிப்புடன் நின்றுகொண்டே இருக்கிறாளாம் அன்னை மஹால்க்ஷ்மீ ..
அன்னையைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக ! ஓம் மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment