GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE " VARUDINI EKADASHI THITHI " MAY YOU BE REDEEMED FROM ALL YOUR PAST SINS & BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH & SUCCESS TOO .. " OM NAMO NAARAAYANAAYA "OANVEL BALAGAN PATHAM POTRI...GURUVE SARANAM


” பண்டை நான்மறையும் கேள்வியும் கேள்விப் பதங்களும் பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் கொண்டல் மாருதமும் குரைகடல் ஏழும் ஏழுமாமலைகளும் விசும்பும் அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்கமாநகர் அமர்ந்தானே “ ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
இன்றைய தேய்பிறை ஏகாதசித் திதியை 
“ வரூதினி ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. தங்களது சகலபாவங்களையும் நீக்கி .. மங்களங்களை தந்தருள எமை காத்தருளும் ஸ்ரீமன் நாராயணனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
கிருஷ்ணபக்ஷ்த்தில் வரும் இன்றைய ஏகாதசித் திதியை வரூதினி ஏகாதசியாக கொண்டாடுவர் .. அன்று விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அளவில்லாத சௌபாக்கியம் கிடைக்கும் .. இவ்விரதத்தைக் கடைபிடிப்பதால் மனிதர்களின் சர்வபாவங்களும் நீங்கப்பெறுகிறது .. துர்ரதிஷ்டத்தால் துக்கத்தில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தை கடைபிடிப்பதால் சகலசௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினைப் பெறுவர் ..
உத்தமமான இவ் ஏகாதசி விரதத்தின் புண்ணிய மஹிமையால் மனிதர்கள் இவ்வுலகில் அல்லாது பரலோகத்திலும் சுகபோகங்களை அனுபவிப்பதுடன் முடிவில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர் ..
சாஸ்திரங்களில் குதிரை (அஸ்வ) தானத்தைவிட யானை (கஜ) தானம் மேலானது எனவும் .. பூமிதானத்தை விட தில(எள்) தானம் மேலானது எனவும் .. தில தானத்தைவிட சொர்ணதானம் பன்மடங்கு மேலானது எனவும் .. தான தர்மங்களைப் பற்றி குறிப்பிடும்போது கூறியுள்ளனர் .. மேலும் 
சொர்ணதானத்தைவிட அன்னதானம் மேன்மையானதும் .. சிரேஷ்டமானதும் ஆகும் என்றும்
கூறியுள்ளனர் .. இவ்வுலகில் அன்னதானத்திற்கு ஈடான தானம் வேறெதுவும் இல்லை .. அன்னதானம் 
பித்ருக்கள் .. தேவர்கள் .. மனிதர்கள் என அனைவருக்கும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது ..
தகுதியானவருக்கு கன்யாதானம்செய்து கொடுப்பது அன்னதானம் செய்வதற்கு இணையானது என்றும் அறியாமையில் உழல்பவருக்கு ஜீவனமுக்திக்கு வழிகோலும் ஆன்மீக அறிவினைப் புகட்டுவது அதைவிட மேலானது என்றும் சாஸ்திரம் அறிந்த சான்றோர் கூறியுள்ளனர் .. கன்யாதானம் .. அன்னதானம் .. கோதானம் மற்றும் ஆன்மீக அறிவு புகட்டுதல் முதலிய உத்தமமான நற்கர்மங்களால் கிட்டும் ஒருங்கிணைந்த புண்ணியபலனை ஒருவர் வரூதினி விரதம் அனுஷ்டிப்பதின் மூலம் பெறுவர் ..
வரூதினி ஏகாதசியாகிய இன்று இறை சிந்தனையுடனிருந்து எம்பெருமான் அருள்பெற்று அனைத்திலும் வெற்றி காண்போமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

No comments:

Post a Comment