” இனியோ நாமுய்ந்தோம் ! இறைவன் தாள் சேர்ந்தோம் ! இனியோரிடறில்லோம் நெஞ்சே ! இனியோர் வினைக்கடலை யாக்குவிக்கு மீளாப்பிறவிக்கனைக் கடல் நீந்தினோம் காண் “
( காரைக்கால் அம்மையார் )
( காரைக்கால் அம்மையார் )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் .. பிரதோஷமும் சேர்ந்து வருவது சிறப்பு .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிமிகுந்த நன்னாளாக அமைந்திடவும் .. பாவங்கள் நீங்கப்பெற்று .. நல்லாரோக்கியமும் .. மகிழ்ச்சியும் என்றும் வாழ்வில் நிலைத்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் “ சோமவார பிரதோஷம் “ என்றழைக்கப்படுகிறது .. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதாலும் இதனை பிரதோஷம் என்று அழைப்பார்கள் .. சிவாலயங்களில் இன்று சோமவாரப் பிரதோஷம் நடைபெறுகிறது .. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிபிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச் சிறப்பு உண்டு .. இந்நாள் முழுவதும் சிவநாமம் ஜெபித்து மாலைவேளையில் ( 4.30 - 6.00 மணிவரை) ஆலயதரிசனம் செய்வது சிறப்பாகும் ..
சிவனை வழிபட ஏற்றகாலம் சாயரக்ஷை .. அதிலும் சிறந்தது சோமவாரம் .. அதனிலும் சிறந்தது மாதசிவராத்திரி ..அதனிலும் சிறந்தது பிரதோஷம் .. சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள் .. தரித்திரம் ஒழியவும் .. நோய்தீரவும் .. தீயநோய்களின் துயர்மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும் ..
பிரதோஷ காலம் என்பது பரமேஸ்வரனின் ஆனந்த தாண்டவம் நிகழுகின்ற காலம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன .. தினசரி பிரதோஷகாலம் என்று மாலையில் வருகின்ற சந்தியாகாலத்தினைக் குறிப்பிடுவர் .. பொதுவாக திரயோதசி திதியானது மாலைநேரத்தில் வரும்நாளில் பிரதோஷவிழாவினைக் கொண்டாடுவது நமது வழக்கத்தில் உள்ளது ..
இந்த திரயோதசி நாளில் நந்தியம்பெருமானின் இருகொம்புகளுக்கு இடையில் உலகத்திற்கே அப்பனாகிய இறைவன் மனமகிழ்ச்சியோடு ஆனந்தமூர்த்தியாக நடனமாடும் நேரத்தில் பிள்ளைகளாகிய நாம் கேட்கும் வரங்கள் அனைத்தும் உடனடியாக இறைவனின் அருளால் கிடைத்துவிடும் ..
” இப்பிறவிக்கு வேண்டியன எல்லாம் தரும் .. வேண்டத்தக்கது அறிவோய் நீ ! வேண்டமுழுதும் தருவோய் நீ ! எனும் மாணிக்கவாசகரின் திருவாசக வாக்கிற்கு இணங்க நமக்கு வேண்டியது அனைத்தும் அருள்பவர் பெருங்கருணை வடிவான எம்பெருமான் சிவபரம் பொருளே !
“ சிவாய நமஹ “ எனச்சொல்லி நம் சிறுமனதை சிதறாமல் கட்டி .. சிவனருளே ! எல்லாமென சிந்தையில் வைத்து .. சிவனே உன் அருளுக்காக தவமிருப்போம் ! சிவ சிவா ! நம்முள்ளே கலந்தருள்வாயாக ! எனப் பிரார்த்திப்போமாக ..
” ஓம் நமசிவாய “ வாழ்க
No comments:
Post a Comment