GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & BLESSED WITH GOOD LUCK .. BEST HEALTH & HAPPINESS TOO .. " OM MURUGA "PANVEL BALAGAN PTHAM POTRI..GURUVE SARANAM SARANAM






” முருகன் அவன் நாமம் சொல்லிப் பாடுவோம் ! 
மனம் உருக .. உருக .. கந்தன் பாதம் நாடுவோம் ! 
நீலமயில் மீதில் அவன் ஏறுவான் !
நம் உளம் மகிழ நொடியில் முன்னே தோன்றுவான் ! 
ஆடி அவன் வரும் அழகைப் பார்க்கனும் ! 
நாம் கூடி நின்று அவன் புகழைப் பாடனும் ! 
தேவியர்கள் இருவருடன் அருளுவான்! 
நமைத் தாயெனவே காப்பதிலே மகிழுவான் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
செவ்வாய்க்கிழமையாகிய இன்று ஊழிக்காலத்தை உருவாக்குபவனும் .. பின் உயிர்களைக் காப்பவனும் .. உலகங்களை உருவாக்குபவனும் .. யாவருக்கும் தலைவனும் .. அடியார்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனும் .. ஆனந்தப் பெருக்கினை உடையவனும் .. பிறைசூடனின் பிள்ளையுமான கந்தனைத் துதித்து தங்கள் கோரிக்கைகள் வேண்டியவாறே அளித்திடவும் .. கிரகதோஷங்கள் நீங்கி கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றி அருளை வாரிவழங்கும் அந்த குகனை இந்தக் கலியுகத்தில் இடைவிடாமல் துதித்தால் பயம் விலகும் .. அச்சத்தை உதறிவிட்டு மோட்ச லாபத்தை அடையவேண்டும் என்ற எண்ணத்தைச் செயல்படுத்த அந்திமகாலம்வரை காத்திருக்காமல் நன்றாய் இருக்கும் போதே உணர்ந்து ஆறுமுகனை ஆராதனை செய்யவேண்டும் ..
இந்த உலகில் சாஸ்திரம் என்றால் அது ஸ்காந்தம்தான் எந்த பொருளுக்கும் விளக்கம் கந்தபுராணத்தில் உண்டு 
ஒரேதேவன் - ஈசனின் மகனான கந்தன் .. 
ஒரே மந்திரம் - சரவணபவ .. 
ஒரே மோட்சம் கந்தனுக்கு அண்மைதான் .. ஆகையால் 
சகலரும் இகத்திலும் பரத்திலும் இன்பமாய் வாழ சுப்ரமண்யனை வழிபடவேண்டும் ..
கந்தன் திருநீறணிந்தால் கண்டபினி ஓடிவிடும் ! குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும் ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

No comments:

Post a Comment