SWAMI SARANAM GURUVE SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT WEDNESDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD VISHNU .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED & MAY YOU BE BLESSED WITH PEACE & HAPPINESS TOO .. " OM NAMO NAARAAYANAAYA "


” பையப் பையப் பயில்வாய் அலையாதிருக்கவே ! 
மெய்ப்பொருளின் சித்தத்தை நிலை நிறுத்தவே ! 
குருவின்பாத கமலத்தில் குறையா பக்தி வைப்பாயேல் 
பிறவிச் சிறையினின்று துரிதம் மீள்வாய் உறுதி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
மேலானவற்றுக்கெல்லாம் மேலானவனும் .. எவராலும் பக்தியால் அடையக்கூடிய ஒப்பற்றவனாகிய ஸ்ரீவிஷ்ணுபகவானைப் புதன்கிழமையாகிய இன்று துதித்து நீண்ட ஆயுள் .. மற்றும் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் என்றும் நிலவிட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றையநாளில் அமாவாசை திதியும் கூடிவருவதால் நம்முடன் வாழ்ந்து மறைந்த நம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜைகள் செய்வது சிறப்பு .. என்றும் அவர்களது ஆசியும் நல்லருளும் தங்களனைவருக்கும் ஒருபாதுகாப்பாக அமையும் ..
சாதாரணமனிதர்களின் கால்கள் என்று கூறப்படுவது மகான்களுக்கும் இறைவனுக்கும் குறிப்பிடும்போது 
“ திருவடி “ என்றழைக்கப்படுகிறது .. ஒருவர் தவறு செய்துவிட்டால் வெறுமனே மன்னிப்பு என்று கேளாமல் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினால் உடனேயே மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ கிடைக்கும் .. ஆனால் இறைவன் திருவடியில் சரணாகதி ஆகி தவறுக்கு மனமுருகி மன்னிக்க வேண்டினால் சாதாரண மக்களே மனம் இரங்கும் போது .. மகேசன் மனம் இரங்காதோ !
பகவான் வாமன அவதாரம் எடுத்து பலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு .. இரண்டடியில் அனைத்தையும் அளந்துவிட்டு மூன்றாவது அடிக்கு தன் திருவடியையே பலியின் சிரசில் வைக்கிறார் .. ஒவ்வொரு அவதாரத்திலும் பகவான் எவரையேனும் சம்ஹாரம் செய்வார் .. ஆனால் வாமன அவதாரத்தில் சம்ஹாரம் செய்யாததன் காரணம் .. பிரகலாதனுடைய தந்தை இரண்யகசிபுவை வதம்செய்தபின் இனி பிரகலாதனுடைய வம்சத்தில் எவரையும் சம்ஹாரம் செய்வதில்லை என்று பகவான் பிரகலாதனிடம் உறுதி அளித்திருப்பதால் ..
பலியின் சிரசில் தன் திருவடியை அழுத்தி பாதாளலோகத்தின் அதிபதி ஆக்கினார் .. பிரகலாதனுடைய பக்தியின் தாக்கம் பேரன் மகாபலி சக்ரவர்த்தி வரை வந்து பகவான் திருவடி சம்பந்தப்பேற்றினை அடைந்தான்.. மகாபலி .. 
ராமாவதாரத்தில் சாபம் நீங்கி கல்லாயிருந்த அகலிகை அழகு மங்கையானது ஸ்ரீராமனின் திருவடி கடாக்ஷ்மே!
பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடி அருகே ஏன் அன்னை மஹால்க்ஷ்மி அமர்ந்திருக்கிறாள் என்றால் .. ஜீவன்கள் முக்தி அடைந்ததும் எம்பெருமான் நாராயணனின் திருவடிகளை சேர்கின்றன.. அப்படி சேர்ந்த ஜீவன்களின் சிறு சிறு பாவங்களை களைந்து தூய ஆத்மாவாக இறைவனை அடையச் செய்பவள் கருணையே வடிவான மஹாலக்ஷ்மி .. அதனால்தான் திருவடி அருகே இருக்கிறாள் ..
இறைவனின் நேரடி ஸ்பரிசம் நமக்குக் கிட்டுவதில்லை .. இதற்காகவே இறைவனின் திருவடியாக வெள்ளியாலான உலோக தொப்பிபோன்ற சடாரியை கர்ப்பகிரஹத்திலிருந்து எடுத்துவந்து பக்தர்களின் சிரசில் வைப்பார்கள் .. சடாரி என்பது இறைவனின் திருவடியாக சொல்லப்படுகிறது .. எனவே ஒவ்வொருவருக்கும் சடாரி வைக்கும் போதும் சாட்சாத் பெருமாளின் திருவடியை நாம் நம் சிரசில் தாங்கிக் கொள்வதற்கு இது ஒப்பாகும் ..

பகவானின் திருவடிதனை நாம் சிரசில் ஏற்பதால் நம் துர்குணங்கள் விலகி நேர்மறை சிந்தனைகள் பெருகி உடலாரோக்கியம் கிட்டும் .. பெருமாள் திருவடிசூடி பேரின்பம் காண்போமாக ! ஓம் நமோ நாராயணாய !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


 

No comments:

Post a Comment