SWAMY SARANAM GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD BHAIRAVA .. MAY HE PROTECT YOU FROM ALL THE EVIL FORCES & SHOWER YOU WITH BEST HEALTH & HAPPINESS " JAI SHREE BHAIRAVAAYA NAMAHA "



” சினந்தவிர்த் தன்னையின் சின்மயப் புன்னகை சிந்தையில் ஏற்றவனே ! தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் ! வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான் தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான் தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்திடும் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நாளில் காலபைரவருக்கு உகந்த “ பரணி “ நட்சத்திரமும் கூடிவருவது சிறப்பு .. (மாலைவரை உள்ளது பரணி)
இந்நாளில் பைரவரைத் துதித்து தங்களனைவரது காலத்தடைகள் யாவும் நீங்கி எதிரிகளின் பயம் அகன்று 
வாழ்வினில் ஏற்றத்தைக் காண பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே ! 
சூலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ பரவஹ் ப்ரசோதயாத் !!
“ சித்திரைப் பரணி “ விரதம் சித்திரை மாதம் பரணிநட்சத்திரத்தில் பைரவரைக் குறித்து கடைபிடிக்கப்படும் விரதமாகும் .. இன்றைய நாளில் பைரவமூர்த்திக்கு பூஜைசெய்து தயிர்சாதம் படைத்து விரதமிருந்தால் தீங்கிழைக்கும் எதிரிகள் மிகவும் பாதிப்படைவர் .. வாழ்வின் முன்னேற்றத்தடைகளும் தூள் தூளாகும் ..
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர் .. நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே ! தேவ .. அசுர .. மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனிபகவானாவார் .. சனிக்கு வரம்தந்து இக்கடமைகளைச் செய்யவைத்த சனியின்குரு ஸ்ரீபைரவரேயாவார் .. சனியின் வாதநோயை நீக்கியவரும் பைரவரே !
சனீஸ்வரரின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்கவேண்டியிருந்தாலும் அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையே செய்வார் ..
சிவாலயங்களில் விநாயகர் தரிசனத்துடன் ஆரம்பிக்கும் வழிபாடு பைரவ தரிசனத்துடன் நிறைவடையும் .. பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது .. பொதுவாக மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்லகாரியமும் செய்யமாட்டார்கள் ..
இறையாணைப்படி அனைத்து ஜீவராசிகளுக்கு எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்டலக்ஷ்மிகள் .. சொர்ணபைரவரிடமிருந்து சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற சக்தியினை பக்தர்களுக்கு அளித்து வருகின்றனர் .. தாங்கள் பெற்ற சக்தி குறைய .. குறைய ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்கின்றனர் .. அஷ்டமி அன்று அஷ்டலக்ஷ்மிகள் பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால் அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபடமுடியாது .. ஆகவே அஷ்டலக்ஷ்மிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில் நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கி வந்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் ..
பைரவரைத் துதித்து வாழ்வில் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ இறையருளும் .. குருவருளும் இனிதே வழிநடத்தட்டும் .. 
“ ஓம் காலபைரவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

பெருமாள்



No comments:

Post a Comment