” எங்களை வாழவைக்கும் எங்களின் அன்னை நீயே !
எங்களின் உயிரில் ஆத்மா என்றிடும் இறைவி நீயே !
பொங்கொளி பரப்பும் தாயே ! புனிதமே கோபிகொண்ட
மங்கள அன்னை நீயே ! மலரடி பணிகின்றோமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் “ அட்சய திரிதியை “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. இல்லறங்களில் கிருஹலக்ஷ்மி என்ற கிரஹதேவதையாகவும் வாரிவழங்கும் காமதேனுவாகவும் சமுத்திரத்தில் தோன்றியவளும் ..
வேள்வியின் நாயகியுமாகிய அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவரது துயர்களைந்து .. அன்னையின் கருணைமிகுந்த அன்னையின் கருணைமிகுந்த பார்வையினால் துன்பத்தைநீக்கி பொருள்மழை பொழிவித்து நல்லாரோக்கியமும் அருளிட பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே !
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !!
ஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறை காலத்தில் 3 வது திதியாக “ திருதியை திதி “ வருகிறது சித்திரைமாத அமாவாசைக்கு பின் வருகிற திருதியை திதியையே “ அட்சய திருதியை “ என்று அழைக்கிறோம் .. இந்த ஆண்டிற்கான அட்சய திருதியை இன்று மாலை ஆரம்பமாகின்றது .. குபேரன் தான் இழந்த நிதிகளைத் திரும்பப் பெற்ற தினமே இந்த அட்சய திருதியை என்று புராணங்கள் கூறுகின்றன ..
“ அட்சய “ என்றால் எப்போதும் அள்ள அள்ள குறையாது ..வளர்ந்து பெருகுவது என்று பொருள் .. அதாவது இந்நாளில் செய்யப்படும் நல்ல செயல்களான தான தருமங்கள் அள்ள அள்ள குறையாது அதிக பலன்களைத் தரும் .. ஆரம்பிக்கும் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக அமையும் என்பதே வேதவாக்கு ..
இந்நாளைப்பற்றி புராணங்களிலும் .. நாடிகளிலும் .. தர்மசாஸ்திரத்திலும் பலவிஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன .. அவற்றுள் சில ..
குசேலன் வறுமையில் வாடுகிறபோது ஸ்ரீகிருஷ்ணரை சந்திக்க முடிவெடுத்து ஒருபிடி அவலை தன் மேலாடையில் முடிந்துகொண்டு புறப்படுகிறார் அவரை நன்கு உபசரித்த கிருஷ்ணபகவான் அவர் அன்போடு கொண்டுவந்த அவலை மகிழ்ச்சியுடன் உண்டு அந்த அவலின் ருசியில் மகிழ்ந்து
“ அட்சயம் உண்டாகட்டும் ” என்று வாழ்த்தி அனுப்புகிறார் .. அதேகணத்தில் குசேலனின் வீடு மாடமாளிகையாக மாறுகிறது .. அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவரது வீட்டில் குடிகொள்கின்றன ..
மஹாவிஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமனின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது .. சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிக்ஷை அளித்தநாள் .. கௌரவர் சபையில் திரௌபதி துகிலுரியப்பட்டபோது ஆடைகளை அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்நாளே ! ஐஸ்வர்யலக்ஷ்மி அவதரித்த நாளும் இன்றே .. சங்கநிதி ,, பத்மநிதியை குபேரன் பெற்றநாள் .. மஹாவிஷ்ணுவின் வலமார்பில் மஹாலக்ஷ்மி இடம்பிடித்தநாள் .. என பல சிறப்புகளைக் கொண்டது அட்சய திருதியை ..
“ பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் “ என்பது ரமணர் வாக்கு .. இல்லாதோர் இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள் .. தர்மங்கள் பலமடங்கு அதிகமாக உதவி செய்தவருக்கே ஏதாவது ஒருவகையில் திரும்ப கிடைக்கும் .. வளமான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்தித் தரும் .. இந்நாளில் சுயநலத்துடன் செய்கிற காரியங்களைவிட பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும் ..
ஏழை நோயாளிகளுக்கு .. சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு .. உடை தானமாகக் கொடுக்கலாம் .. ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம் ஆதரவற்றோர் .. முதியோர் இல்லங்களுக்குச் சென்று உணவு .. இனிப்புகள் வழங்கலாம் .. பசு .. பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி .. செல்வ வளம் ஏற்படும் ..
” மகிழ்வித்து மகிழ் “ என்று சொல்வார்கள் .. எனவே மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து பல புண்ணியங்கள் பெற்று .. ஆயுள் .. ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வுதனை பெறுவோமாக .. “ ஓம் மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே”
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment