PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED " SADURTHI THITHI " & A HAPPY WEEKEND TOO .. MAY LORD GANAPATHY REMOVE ALL THE OBSTACLES & NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH LOVE & HAPPINESS TOO .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "


” முன்னவனே ! யானை முகத்தவனே !
முத்திநலம் சொன்னவனே ! சிற்பரனே ! 
ஐங்கரனே !செஞ்சடையஞ் சேகரனே ! தற்பரனே !
நின்தாள் சரண் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சதுர்த்தித் திதியாகிய இன்று அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் “ ஓம் “ எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் கணபதியைத் துதித்து .. தங்களனைவரது இன்னல்கள் யாவும் களைந்து .. வாழ்வில் நிம்மதியும் .. சந்தோஷமும் என்றும் நிலைத்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களிலும் தடைகள் .. தடங்கல்களின்றி வெற்றிகிட்டவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
சதுர்த்தித் திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும் இன்றைய சுக்லபக்ஷ சதுர்த்தித் திதியை (வளர்பிறை) 
‘வரசதுர்த்தி’ என்றழைப்பார்கள் .. விநாயகர் பிரணவத்தின் வடிவம் .. இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி .. பிள்ளையார்சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும் ..
கணங்களுக்கெல்லாம் அதிபதியாவதால் அவரை 
“ கணபதி “ என்று சொல்கின்றோம் .. எனவே நாம் தேவகணத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் ..
மனிதகணத்தில் பிறந்தவராக இருந்தாலும் ..
அசுரகணத்தில் பிறந்தவராக இருந்தாலும் .. அனைவரும் வணங்கவேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப்பெருமானாகும் ..
மேலும் விநாயகர் முக்கண் உடையவரெனவும் விளக்கப்பட்டுள்ளது .. முக்கண் உடைய பெருமை சிவனுக்கே உரியது .. ஆயினும் கிரியாவழி .. ரூபவழி நோக்குமிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம் ..
எந்த இடமாயிருந்தாலும் பிள்ளையாரைத் தொட்டு வணங்கக்கூடாது .. அவர் உடல் பூதகணம் .. பாதம்தொட்டு வணங்கவேண்டும் .. அவரின் கால் தேவபாதம் .. தேவபாதங்களைத் தொட்டு வணங்கினால் நினைத்தகாரியம் கைகூடும் ..
ஒற்றைக்கொம்பன் .. இருசெவியன் .. முக்கண்ணன் .. சதுர்புஜன் .. ஐங்கரன் ஆறாதாரத்துள்ளான் .. அவனை வணங்கின் ஏழுபிறவி நீங்கி எண்திசை போற்ற .. நவமணிகளும் .. சம்பத்தும் பெற்று வாழ்வர் .. 
“ ஓம் விக்னவிநாயக பாத நமஸ்தே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person


No comments:

Post a Comment