SWAMY SARANAM...GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE PANJAMI THITHI TOO .. MAY GODDESS MAA VARAAHI PROTECT YOU FROM ALL THE EVIL FORCES FROM YOUR LIFE & GUIDE YOU ALONG THE RIGHT PATH .. " JAI SHREE VARAAHI DEVI "


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி ! 
வஞ்சர் உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா வயிரவி மண்டலி மாலினி சூலி வராஹி என்றே ! செயிர் அவி நான்முறை சேர் திருநாமங்கள் செப்புவரே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
வளர்பிறை பஞ்சமித் திதியாகிய இன்று அன்னை வராஹியை வழிபடுவது சிறப்பு .. அன்னையைத் துதித்து தாங்கள் எண்ணிய எண்ணங்கள் யாவும் ஈடேறவும் .. சொன்ன வாக்கெல்லாம் பொன்னாகவும் 
எதிரிகள் யாவரும் நண்பர்களாகி வாழ்வில் வசந்தம் வீசிடவும் .. வராஹிதேவியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஸ்யாமளாய வித்மஹே ! 
ஹலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !!
அன்னையை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம் காட்டிடுவாள் .. வாழ்வில் வெற்றிகள் அனைத்தும் தருவாள் .. அவளே பகளிமுகி
தூமாவதி என்று சொல்வார்கள் .. ஆக வராஹி வழிபாட்டால் வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம்.. எதிரிகளை அன்பால் வெல்லலாம் ..
வராஹி என்ற நாமத்தைக் கேட்டாலே ! பலருக்கு பயம் வரும் .. அப்படியான ஒரு அம்பிகை நாமம்தான் வராஹி .. சப்தகன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள் .. பஞ்சமித்தாய் வாழ்வின் பஞ்சங்களைத் துரத்துபவள் வராஹி வராஹரின் சக்தி என்றும் எமனின் சக்தி (நீதி தெய்வம் ) என்றும் சொல்லப்படுகிறாள் .. அதில் வராஹ அவதாரத்தோடு 
சொல்லப்படும் செய்தி வராஹியின் தத்துவத்தை உணர்த்திவிடும் ..
வராஹம் என்றால் பன்றி .. வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராஹிதான் ..பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது .. எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஓர் பிராணி ..ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன்மூக்கின்நுனியில் வைக்கவேண்டும் (பூமியை ஒருதூக்கு தூக்கி தலையை உயர்த்தி)
ஆனால் தான் கொண்ட உருவத்தினியல்பை
(இயற்கை ) மாற்றமுடியாதல்லவா .. ? அந்த உந்துதலுக்கு ( உயர்த்துதலுக்கு) உதவியவள் தான் வராஹி ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம் .. அன்னையின் வழிபாட்டால் நம்முடைய வாழ்வும் தானாய் உயரும் .. வராஹி வழிபாடு நமக்கு நம்மை உணர்தலை .. உயிரை உணர்த்துதலை பலனாய்த் தரும் ..வராஹி வழிபாட்டின் பலன் நம்மை சாதாரணமனிதர் என்னும் படியிலிருந்து உயர்த்தி அடுத்தநிலைக்கு கொண்டுசெல்லும் ..
அன்னை வராஹியை வழிபடுவோம் ! வாழ்வில் ஏற்றம் காண்போம் ! 
 “ வராஹியின் பாதார விந்தங்களே சரண் ! அன்னையின் நாமமே துணை “ 
“ ஓம் ஸ்ரீ மஹாவராஹி நமோஸ்துதே “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
..

No comments:

Post a Comment