PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமி சரணம் குருவே சரணம் GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD SURYADEV ..MAY LORD SURYA & AGNIDEV GIVE YOU ENERGY & STRENGTH DURING THIS AGNI NAKSHATRA DAYS AGNI NAKSHATRAM IS THE PERIOD WHEN THE SUN (SURYA) PASSES THROUGH KRITHIKAI STAR .. THE PERIOD IS CONSIDERED TO BE THE PEAK SUMMER SEASON .. " JAI SHREE SURYA DEV "


பேராழியுலகனைத்தும் பிறங்கவள ரிருணீங்க 
ஓராழிதனை நடத்து மொண்சுடரைப் பரவுதுமே 
பனியாழியுலகனைத்தும் பரந்தகலியிருணீங்கத்
தனியாழிதனை நடத்துஞ் சயதுங்கன் வாழ்கவென்றே”
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நாளில் அக்னி நட்சத்திரம் எனப்படும் “ கத்ரி வெயிலும் ” ஆரம்பமாகின்றது .. இந்நாளில் சூரியபகவானைத் துதித்து தங்களனைவரையும் வெயிலின் தாக்கத்திலிருந்தும் காத்தருளும்படி பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!
அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் காலகட்டம் சூரியனின் சஞ்சாரத்தை மையமாகவைத்து கணக்கிடப்பட்டுள்ளது .. சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் நுழைந்தவுடன் கோடைகாலத்தின் ஆரம்பமாக சூரியனின் கதிர்கள் நம்மை சுட்டெரிக்கின்றன .. மேஷராசி செவ்வாயின் வீடாக இருப்பதாலும் .. செவ்வாய் நெருப்புக்கோள் என்பதாலும் உஷ்ணம் உருவாகிறது .. சூரியன் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் நுழையும் காலம் முதல் .. ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம் முடியும்வரையுள்ள காலகட்டமே அக்னி நட்சத்திர காலமாகும் ..
இதில் கிருத்திகை நட்சத்திரத்தில் செல்லும் காலத்தில் அதாவது சித்திரை கடைசிவாரம் தொடங்கி - வைகாசி முதல்வாரம் வரையுள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான “ கத்திரி வெயில் “ எனப்படுகிறது .. 
கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் .. 
அதிதேவதை - அக்னி .. ஆகவேதான் நெருப்புக்கு இணையான வெப்பத்தைக் கக்குகிறது .. வெயில் கொளுத்தி எடுக்கும் இந்த காலத்துக்கு
” அக்னி நட்சத்திரம் “ என்று பெயர்வர இதுவே காரணம்
கத்திரி வெயில் எனப்படும் அக்னிநட்சத்திரம் இன்று 4ம்திகதி முதல் ஆரம்பமாகி - மேமாதம் 28ம் திகதிவரை அதன் தாக்கம் நீடிக்கிறது ..
இந்த அக்னிநட்சத்திரம் குறித்து புராணம் கூறும் தகவலைக் காண்போமாக .. 
யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம் .. இந்த காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன்மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும் .. இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்து வளர அவ்வப்போது மழைபெய்யச்செய்தான் .. மழையின் அதிபதியான இந்திரன் ..
இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில் யமுனை நதியில் கண்ணனும் .. அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி கரையேறும்போது ஓர் அந்தணர் வந்து இருவரையும் பார்த்து “ உங்களிருவரையும் பார்த்தால் கருணைமிக்கவர்களாத் தெரிக்கிறீர்கள் .. எனக்கு அதிக பசி .. என்பசிக்கு உங்களால் மட்டுமே உதவமுடியும் இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது .. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்யவேண்டும் என்று வேண்டினார் ..
அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே கண்ணன் அந்தனரை உற்றுப்பார்த்து அக்னிதேவனே ஏன் இந்த வேடம் ? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன் .. உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே ! தங்களுக்குத் தெரியாததா 
சுவேதி என்ற மன்னனுக்காக துர்வாசமுனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார் யாகத்தின் விளைவால் அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன் .. அதனால் மந்தநோய் என்னைத் தாக்கிவிட்டது அந்தநோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைகள் இந்த வனத்தில் உண்டு அவற்றை நான் கபளீகரம் செய்தால் என்பிணிதீரும் என்றான் ..
அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள் ? என்றான் அர்ச்சுனன் .. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் பொழுதெல்லாம் இந்திரன் மழைபெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு என் தீ நாக்குகளை அணித்து என் முயற்சியைத் தடுத்துவிடுகிறான் என்றான் .. அக்னிதேவனே ! நாம் உதவவேண்டுமானால் வில்லும் அம்பறாத்தூணியும் அம்புகளும் வேண்டும் .. ஏனென்றால் இங்கு நீராடவே வந்தோம் எனவே இந்திரன் மழைபெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை என்றான் .. உடனே அர்ச்சுனனுக்காக சக்திவாய்ந்த காண்டீப வில் .. அம்புகள் .. அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னிபகவான் ..
அப்பொழுது கண்ணன் உன் பிணியை தீர்த்துக் கொள்வதற்காக 21 நாட்கள் (25) மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம் .. அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம் என்றார் .. அக்னிதேவனும் வனத்திற்குள் பிரஏசித்து வனத்தை எரிக்கத்தொட்ங்கினான் .. இதனைக்கண்ட இந்திரன் மழைபெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக்கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க அர்ச்சுனனும் அந்த வனத்தில் மழைபொழியாமலிருக்கு “ சரக்கூடு” ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித்தடுத்தான் .. அக்னியும் அனைத்தையும் பகுதி பகுதிகளாக கபளீகரம் செய்துவிட்டு வெளியேறினான் ..
இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னிநட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது .. அக்னி நட்சத்திர நாட்களில் 
முருகனையும் - செவ்வாய்க்கு அதிபதி ..
சூரியனையும் .. 
பரணிக்குரிய - துர்க்கையையும் ..
அக்னி - கார்த்திகையின் அதிதேவதையையும் வழிபட்டு .. அகமும் .. புறமும் குளிரும் வண்ணம் ஏழை எளியோர்க்கு மோர் .. நீர் ,, குடை .. காலணி போன்றவற்றை தானமாக வழங்கி சுட்டெரிக்கும் அக்னியிலிருந்தும் நிவாரணம் பெறுவோமாக !

” ஓம் சூர்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


No comments:

Post a Comment