SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...


சித்தன் செயல் அன்றி
என் செயல் ஏதுமில்லை
அத்தனவன் ஆட்டுவிக்க
ஆடுகிறேன் பொம்மை போல
நித்தமுனைக் கைதொழவே

குருநாதன் பூஜை
குறைவில்லாமல் கிடைக்கிறதே

பக்திப் பிரவாகம்'
சக்தி ஒன்றுபிறக்கிறது
சரணம்  வழிபாட்டில்

வித்தகனாய் என்னாவிலமர்ந்து
சத்தியங்கள் பேசுகிறான்
எத்திசையும் எக்கணமும் 
அவனாகி என்னுள் இருந்து
நித்திலமும் நிதர்சனமாய்
சத்தியத்தின் சான்றுரைத்து
சங்கடங்கள் பல தீர்த்து 
முத்தி பெற வழிகாட்ட
என்னாவில் வந்தமர்ந்தான்
என்ன தவம் செய்தேன் நான்
என்னை ஆட்கொண்ட 
பன்வேல் குடியிருக்கும் பரந்தாமன் மைந்தனே
பக்தியினாலுனைப் பணிந்தேற்றுகிறேன்
 

No comments:

Post a Comment