PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " MOHINI EKADASI " .. MAY LORD VISHNU RELIEVE YOU FROM SINS & FULFILL ALL YOUR DESIRES TOO .. MOHINI EKADASI PURIFIES THE LIFE OF SINFUL REACTIONS & MAKE THE PERSON PERFECTLY VIRTUOUS .. " OM NAMO NAARAAYANAAYA "PANVEL BAALAGAN PATHAM POTRI POTRI...GURUVE SARANAM SARANAM


Image may contain: indoor




 சாந்தாகாரம் புஜகஸயணம் பத்மஞாபம் ஸுரேஷம் 
விச்வாதாரம் ககநஸத்ருகம் மேகவர்ணம் சுபாங்கம் 
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யெரகிஹ்ருத் த்யாந சும்யம்!
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம் 
ஓம் நமோ நாராயணாய “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த 
“ ஏகாதசி “ விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. இன்றைய வளர்பிறை ஏகாதசியை “ மோகினி ஏகாதசி” என்றழைப்பார்கள் .. இதனை அனுஷ்டிப்போர் இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. அனைத்து கோரிக்கைகள் யாவும் நிறைவேறப்பெற்று சகலசௌபாக்கியங்களும் தங்கள் இல்லம் தேடிவர பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
மனிதர்கள் எப்போதும் நற்சிந்தனையுள்ள சான்றோர் .. சாதுக்கள் ஆகியோரிடம் நட்பு கொண்டிருத்தல் வேண்டும் 
நற்சிந்தனையுள்ளவர்களின் நட்பு மனிதர்களுக்கு நல்லறிவை மட்டுமல்லாது வாழ்க்கை லட்சியத்தையும் அடைவதற்கும் உதவும் ..
தீயசகவாசம் .. அதனால் விளையும் பாபவினைகள் ஒருவரை நரகத்திற்கு மட்டுமே இழுத்துச் செல்லும் .. அத்தகைய நட்பு துன்பம் வரும்காலங்களில் கைவிட்டு விலகி விடுவதால் அனாதையாக தவிக்கநேரிடுகிறது .. அப்போதும் யாராவது ஓர் சான்றோர் நம்மைக் கைவிடாது நன்மார்க்கத்தைக் கூறி அருளுவர் .. மேலும் ஏகாதசியின் மஹாத்மியக் கதையை படித்தும் .. கேட்டும் வரும் தங்களனைவரும் ஓராயிரம் பசுதானம் செய்த புண்ணியத்திற்கு இணையான புண்ணியத்தைப் பெறுவீர்களாக ..
புராணாரலாறு -
சரஸ்வதி நதியின் கரையில் ‘பத்ராவதி’ என்னும் பெயர்கொண்ட நகரம் .. அந்நகரை த்யூதிமன் என்னும் பெயர்கொண்ட அரசன் ஆட்சிபுரிந்து வந்தான் .. அந்நகரில் வற்றாத தனம் .. தான்ய சம்பத்துக்களுடன் தனபால் என்னும் பெயர்கொண்ட வியாபாரி ஒருவர் வசித்து வந்தார் .. பகவான் மஹாவிஷ்ணுவின் பக்தனான இவர் மிகுந்த தர்மசிந்தனையுடன் நகரில் ஆங்காங்கே அன்னதான உணவகங்கள் .. குடிநீர் பந்தல் .. குளம் .. குட்டை .. தர்மசத்திரங்கள் ஆகியவற்றை அமைத்திருந்தார் ..
வியாபாரிக்கு ஐந்து புதல்வர்கள் .. மூத்தவன் கொடியபாபவினைகளை புரியும் பாபியாகவும் .. துஷ்டனாகவும் இருந்தான் .. அவன் துஷ்டர்களுடன் கூடாநட்புகொண்டு சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்தான்.. அவனது செய்கையால் துக்கத்தில் வாடிய வியாபாரி மற்றும் குடும்பத்தினரும் சுடுசொற்களால் நிந்தனைசெய்து வீட்டைவிட்டு வெளியேற்றினர் ..
தான் அணிந்திருந்த விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை விற்று உண்டு நாட்களை கடத்தி வந்தான் பணம் கரைந்ததும் நண்பர்களும் அவனை விட்டு விலகினர் .. பசியும் தாகமும் வருத்தவே இரவுநேரங்களில் திருடவும் செய்தான் .. ஒருநாள் திருடும்வேளையில் நகரகாவலரிடம் பிடிபட .. வியாபாரியின் மகன் என்று அறிந்ததும் திருந்தி வாழுமாறு அறிவுரைகூறிவிட்டு சென்றனர் ..
ஆனால் மீண்டும் சிலநாட்களில் அகப்பட அரசனின் முன் நிறுத்தினர் .. அரசனும் சிறையில் அடைக்க உத்தரவிட்டான் .. சிறையில் சித்ரவதையை அனுபவித்து மீண்டும் அந்நகரைவிட்டு வெளியேற்றினர் 
அதன்பின்பு ஒருகாட்டில் போய் வாழ்ந்து மிருகங்களைக் கொன்றும் .. விற்றும் பசியாறினான் .. வேட்டையில் ஒன்றும் சிக்காமல் போகவே உணவைத்தேடி அலைந்து கடைசியில் கௌடின்ய முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான் ..
அந்நேரம் கௌடின்ய முனிவர் கங்கையில் நீராடிவிட்டு வந்துகொண்டிருந்தார் .. அவரின் நனைந்த வஸ்திரத்தின் நுனியிலிருந்து விழுந்த நீர்துளிகள் அவன்மீதுபட .. பாபியான அவனுக்கு நற்சிந்தனையும் நல்லெண்ணமும் மேலோங்க முனிவரிடம் இருகரம்கூப்பி கண்ணில் நீர்மல்க முனிசிரேஷ்டரே ! நான் என்வாழ்க்கையில் மன்னிக்கமுடியாத அளவு பாபம்புரிந்துள்ளேன் .. என் பாபவினைகளிலிருந்து முக்தி பெற ஏதாவது எளிதான மார்கத்தை அருளும்படி வேண்ட ..
முனிவரும் மோகினி ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைபிடித்து உன் பாபங்கள் நீங்கப் பெற்று புதுவாழ்வு பெறுவாயாக என்று வாழ்த்தியருளினார் .. மோகினி ஏகாதசிவிரத்தத்தின் பிரபாவத்தால் அவனது அனைத்து பாபவினைகளும் அகன்று நல்வாழ்க்கை பெற்று இறுதியில் விஷ்ணுலோகத்தை அடையும் பிராப்தமும் பெற்றான் ..

பகவானைப் போற்றுவோம் ! பலநலன்களையும் பெறுவோமாக ! ஓம் நமோ நாராயணாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


Image may contain: 2 people

Image may contain: indoor

No comments:

Post a Comment