PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGANE POTRI POTRI...GURUVE SARANAM SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY ..WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD SURYA - MAY YOUR SUNDAY BE FILLED WITH LOVE & HAPPINESS TOO .. JAI SHREE SURYA DEV ..

 
 Image may contain: people standing and indoor

” முடிபுனைந்து அரும்பொற்பைம்பூண் முயங்க 
மெய் முழுவதும் பூண்டு வடியிசை மறைபுகன்று மாதவர் அங்கி ஓம்பக் கொடி 
அணி நெடுந்தேர் ஏறிக்குலம்படு 
கமலமங்கை கடிமணம் செய்யத்தோன்றும் 
கதிரவன் திருத்தாள் போற்றி ! போற்றி “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சூரியபகவானுக்கு உகந்த ஞாயிற்றுக் கிழமையாகிய இன்று பகவானைப் போற்றித் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திட சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!


சூரியன் உலகிற்கு கண்ணால் காணும் முதல் கடவுள் சூரிய நாராயணன் என்பர் .. 
சூரியனின் ரதசாரதி கருடனின் சகோதரரான அருணன் ..
சூரியனின் புதல்வர்கள் - யமன் .. சனி .. சுக்ரீவன் .. கர்ணன் .. 
சூரியனின் அருளால் அட்சயப்பாத்திரம் பெற்றனர் பாண்டவர்கள் ..
கைலாயத்தில் மான் தோலணிந்த சிவன் .. அம்பிகையை தன் உடலில் பாதியாக இணைத்துக்கொண்டுள்ளார் .. 
பரந்தாமனாகிய பத்மநாபன் சேஷ சயனராக பாற்கடலில் பள்ளிகொண்டுள்ளார் .. 
பிரமன் யோகநிஷ்டையில் சிந்தைகொண்டு சிருஷ்டியைச் செய்கிறார் .. இவை அத்தனைக்கும் காரணம் சூரியனே ! மூவுலகிற்கும் தலைவனாக .. எப்போதும் மூவுலகைப் பற்றிய சிந்தனையுடனேயே பணியாற்றிக் கொண்டிருப்பதுதான் மும்மூர்த்திகளும் ஒரே சிந்தையோடு அவரவர் பணியைப் புரிந்துகொண்டு இருக்கக்காரணமும் சூரியன் மூவுலகையும் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதுதான் ..
சூரியமண்டலம் வேதங்கள் அறிந்த அனைவரையும் தன்னகத்தே கொண்டது ..
சூரியமண்டலமே ரிக்வேதம் 
சூரிய ஒளிக்கதிர்கள் சாமவேதம் .. 
யோகத்தால் மட்டுமே காணக்கூடிய புருஷன் யஜுர்வேதம் .. 
மூன்று வேதத்தின் உருவமாகவும் உள்ளவர் சூரியன் 
அவன் விகாரமற்றவன் .. 
வேதங்களால் அறியத்தக்கவன் ..
செந்தாமரையாளின் கைகளால் வருடப்பெறும் மஹாவிஷ்ணுவின் திருவடியில் தோன்றும் ஒளிக்கதிர் போல சூரியனின் கதிர்கள் உள்ளன .. விந்தையின் புத்திரனான கருடன் மேல் ஏறிக்கொண்டு விண்ணில் ஏழு உலகையும் கடந்து உலகைக் காக்கின்றான் பரந்தாமன் . அதேபோல சூரியனும் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் அருணன் சாரதியாகப் பணியாற்ற வலம் வந்து மேற்கு திக்கின் எல்லையைக் காண்கின்றார் 
 மஹாவிஷ்ணுவைப்போல விளங்கும் சூரியநாராயணரே!
சூரியனைப் போற்றுவோம் ! நலம்பல பெறுவோமாக ! 
” ஓம் சூர்யாய நமஹ ” வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனு
ம் ..
No automatic alt text available.

No comments:

Post a Comment