PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGANE POTRI POTRI...GURUVE SARANAM SARANAM GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE " SOMAVARA PRADOSHAM " TOO .. MAY THE BLESSINGS OF LORD SHIVA RELIEVE YOU FROM ALL SINS & PAIN FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & PROSPERITY .. " OM NAMASHIVAAYA "


” கோல்வரை மத்தென்ன நாட்டிக் கோளரவு 
சுற்றிக்கடைந்தெழுந்த ஆல நஞ்சு கண்டவர் 
மிகவிரிய அமரர்கட்கருள் புரிவது கருதி 
நீலமார் கடல்விடந்தனையுண்டு கண்டத்தே வைத்த
பித்த நீ செய்த சிலங்கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும்பொழில் திருப்புன் கூருளானோ “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதமும் சேர்ந்து வருவது சிறப்பு .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. மனநலமும் .. உடல்நலமும் .. நல்லாரோக்கியமாகத் திகழவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
திங்கட்கிழமையில் பிரதோஷவிரதமும் கூடிவருவதை 
“ சோமவார பிரதோஷம் “ என்றழைப்பார்கள் .. இவ்விரதம் சிவமூர்த்திக்கு உகந்த விரதங்களுள் தலையாயது .. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் 
“ பிரதோஷம் “ என்றழைக்கப்படுகிறது ..
தோஷம் என்றால் - குற்றமுடையது என்றும் .. 
அதேநேரம் பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்றும் பொருளாகும் .. எனவே குற்றமற்ற இவ்வேளையில் ( மாலை 4.30 - 6.00 மணிவரை) இறைவனை வழிபடுவதால் நம் அனைத்து தோஷங்களும் நீங்கும் ..
பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள் .. 
மற்றைய நாட்களில் சிவபெருமானை மட்டும் வணங்குவதே சிறப்புக்குரியது .. ஆனால் பிரதோஷ நாளில் பிரதோஷ வேளையில் மாலை 4.மணி முதல் 6 மணிவரையிலான காலவேளையில் சிவனோடு நந்தியும் சேர்ந்து காட்சிதந்து அருள்பாலிப்பார் ..நந்திபகவான் அந்த பிரதோஷ காலநேரத்தில் தன்னுடைய தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக வேண்டியதை நிறைவேற்றக்கூடியவர் ..
இறைவன் எப்பொழுதுமே இயற்கையான வில்வ இலை ..
பசும்பால் .. இளநீர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து வழிபடுங்கள் .. தும்பைப்பூமாலை சூட்டி சிவனை வழிபடுவது சகலதோஷங்களும் ..முன்ஜென்மத்தில் செய்த பாவங்களும் விலகுமென்று புராணங்கள் தெரிவிக்கின்றன ..
நாள்முழுவதும் சிவநாமம் ஜெபித்து சிவபுராணம் பாராயணம் செய்து .. மாலைவேளையில் ஆலயந்தரிசனம் செய்வது சிறப்பு ..
எங்கும் சிவனே ! எதிலும் சிவனே ! எல்லாம் சிவனே ! சகலதையும் காத்து அருளும் அம்மையப்பனின் திருவடிகளில் சரணடைவோமாக !
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்


No comments:

Post a Comment