PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A " HAPPY NARASIMHA JAYANTI " & MAY LORD NARASIMHA FULFILL ALL YOUR WISHES & SHOWER YOU WITH HAPPINESS .. PEACE & STRENGTH .. " JAI SHREE NARASIMHAAYA NAMAHA "

 Image may contain: indoor
 Image may contain: indoor
” நாராயணபக்தன் பிரகலாதனுக்கு தரிசனம் தந்து வரம் அருளியவரே ! லக்ஷ்மியின் நாயகனே ! அசுரன் ஹிரண்யனை வதம் செய்தவரே ! மிகப் பெரிய வீரரே ! ஸ்ரீநரசிம்மமூர்த்தியே ! உமைத் துதிக்கின்றோம் ! கடன்களிலிருந்தும் .. சுமைகளிலிருந்தும் எம்மை விடுவிப்பீராக ! கோள்சஞ்சாரத்தால் துன்பங்களை அனுபவிக்கும் பக்தர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்கள் வருத்தம் துடைப்பவரே ! நரசிம்மமூர்த்தியே ! எமை காத்தருள்வாயாக “ (நரசிம்ம துதி)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் 
“ ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி தின நல்வாழ்த்துகளும் “ உரித்தாகுக 
“ எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன் “ என்று நமக்கு உணர்த்தவே பகவான் ஸ்ரீநரசிம்மமூர்த்தியாக அவதரித்த நன்னாளே இன்றாகும் 
வளர்பிறை சதுர்த்தசி திதியும் .. சுவாதி நட்சத்திரமும் (மதியம்) கூடிய இந்நாளே ஸ்ரீநரசிம்ம ஜெயந்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது .. பிரச்சினைகள் யாவும் தீர்ந்து .. செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றியும் .. சுபீட்சமிக்க நல்வாழ்வும் தங்களனைவருக்கும் அமைந்திட ஸ்ரீநரசிம்மமூர்த்தியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் வஜ்ரநாகாய வித்மஹே ! 
தீக்ஷ்ணதம் ஷீட்ராய தீமஹி ! 
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத் !!
நரசிம்மர் என்ற சொல்லிலுள்ள நரன் என்பது - மனிதனையும் .. 
சிம்மம் என்பது - சிங்கத்தையும் குறிக்கும் 
இவர் மனித உடலும் .. சிங்கமுகமும் கொண்டவர் .. அசுர குணங்களுடன் நடப்பவர்களை அடக்க தெய்வம் நினைத்துவிட்டால் அதன் உக்கிரத்தை தாங்க இயலாது என்பதனை நரசிம்ம அவதாரம் எடுத்துரைக்கிறது ..
அதேநேரம் தெய்வத்தின் மீது பக்தி செலுத்தினால் சாந்தமாக லக்ஷ்மிநரசிம்மராய் மாறி வேண்டியதை அள்ளித்தருவார் .. நரசிம்மரின் ஆயுதம் அவரது நகங்களே இதனைக்கொண்டே ஹிரண்யனை வதம் செய்தார் ..
“ நாளை என்பதில்லை நரசிம்மனிடத்தில் “ .. இவர் எழுதும் தீர்ப்பு நமக்கு உடனே தெரியாது .. காலம்தான் தெரியவைக்கும் .. நரசிம்மரை சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி இரவுமின்றி) மாலை சந்தியாப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவது சிறப்பு ..
பக்தனோ பகைவனோ யாராயினும் சரி எவர்காட்டிய இடத்திலும் தான் இருப்பதை மெய்ப்பிப்பதற்காகவே நரசிம்மமூர்த்தியாக தூணிலிருந்து தோன்றினார் .. பிரச்சினைகளை இவரிடம் கொண்டு சென்றாலே அதற்கு அடுத்தவிநாடியே தீர்ப்பும் எழுதப்பட்டுவிடும் .. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றிவழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம்கிட்டும் .. அவரை உபாசனா தெய்வமாக ஏற்றுக்கொள்பவர்களுக்கு எட்டு திசைகளிலும் புகழ் கிட்டும் ..
நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்துபோன வேதங்களும் .. பொருள்புரியாத மொழிகளும் விடுபட்ட யாகங்களும் சாதாரணநிலை நீங்கி உயர்நிலையைப் பெற்றன .. நரசிம்மருக்கு - நரசிங்கம் .. சிங்கபிரான் .. அரிமுகத்து .. அச்சுதன் .. சீயம் .. நரம் கலந்த சிங்கம் .. அரி ஆனரி .. ஆகிய பெயர்களும் உண்டு ..
திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும் .. நரசிம்மரின் வலதுகண்ணில் சூரியனும் .. இடதுகண்ணில் சந்திரனும் .. புருவமத்தியில் அக்னியும் உள்ளனர் .. “நரசிம்மன்” என்றாலே ஒளிப்பிழம்பு என்று அர்த்தம் ..
மற்ற அவதாரங்களில் ஸ்ரீமன் நாராயணன் ஒரு குறிக்கோளுடன் உலக நன்மைக்காக நேரிடையாக அவதரித்து அவதாரநோக்கம் முடிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளிவிட்டார் .. ஆனால் நரசிம்மனாக அவதரித்தது முதல் அன்றும் .. இன்றும் .. என்றும் .. எங்கும் .. எதிலும் ..வீற்றிருந்து இவ்வுலகை ரட்சிக்கும் தனிச்சிறப்புமிக்கது நரசிம்ம அவதாரம் ..
நரசிம்மனை வழிபடும்போது “ ஓம்ஸ்ரீநரசிம்ஹாய நமஹ”
என்று சொல்லி ஒருபூவைப்போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையையும் கற்ற பலன் உண்டாகும் .. மிக ஆபத்தான சூழ்நிலைகளிலும் சங்கடமான அச்சத்தில் இருக்கும் தருவாயிலும் ஸ்ரீநரசிம்மப்பெருமானின் துதியை இதயப்பூர்வமாகவும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் பிரார்த்தனை செய்துகொண்டால் ஓடோடிவந்து காத்து எமை ரக்ஷிப்பார் என்பது உண்மை ..

நரசிம்மனைப் போற்றுவோம் ! சகல வெற்றிகளையும் அடைவோமாக ! வெற்றி நிச்சயம் ! 
“ ஓம் ஸ்ரீ நரசிம்ஹாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


 Image may contain: 3 people, people standing

No comments:

Post a Comment