PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARAAM GURUVE SARANAM SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED " CHITHRA PAURNAMI DAY " .. CHITHRA PAURNAMI IS THE TIME WHERE YOUR SINS CAN ALL BE CLEANSED BY OFFERING FOOD FOR THE POOR & NEEDY PEOPLE .. MAY LORD CHITHRAGUPTA PROTECT YOU FROM ALL EVIL FORCES TOO .. " JAI SHREE CHITHRAGUPTHAAYA NAMAHA "


சித்திரைப் பருவந்தன்னில் உதித்த நற்சித்ரகுப்தன்
அத்தின அவனை உன்னி அர்ச்சனை கடன்களாற்றில்
சித்தியும் பெறுவர் பாரந்தீருமே !எமந்தன்னூரில்
இத்திறன் அறிந்தேயன்னோன் இரங்குவான் அரங்கள் சொற்றே “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தணங்கள் .. சித்ராபௌர்ணமியாகிய இன்று சீர்மிகுவாழ்வுதனை தந்தருளும் ஸ்ரீசித்ரகுப்தனைத் துதித்து நாம் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவு இருந்தாலும் .. அது கடுகளவாகவும் ..கடுகளவு செய்த புண்ணியங்களை மலையளவாகவும் கணக்கில் எழுதிக்கொள்ளவேண்டும் என் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் லேகிறி ஹஸ்தாய வித்மஹே !
பத்ரதராய தீமஹி !
தந்நோ சித்ர ப்ரசோதயாத் !!

இன்று முக்கியமாக நோட்டுப்புத்தகம் .. பேனா .. பென்சில்
முதலிய எழுத பயன்படும் பொருட்களையும் .. அன்னதானம் .. விசிறி .. குடை .. பாதணி போன்ற உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்தால் சித்திரகுப்தன் உங்கள் கணக்கில் நீங்கள் செய்த பாவங்களைக் குறைத்து புண்ணியங்களை அதிகப்படுத்துவார் .. தர்மதேவதையின் அருட்பார்வையை உங்கள் பக்கம் திரும்பி பார்க்கவைப்பார் .. தர்மதேவதை நம்மைப் பார்த்தாலே நாம் செய்யும் தான தருமங்கள் பலமடங்கு பெருகும் .. நோய்நொடி இல்லாமல் எந்தபிறவியும் வளமாகும் .. தங்கள் வாழ்வே இனிதாகும்

சிறப்புப் பொருந்திய இத்திருநாளை அம்மனுக்கும் உகந்ததாகும் .. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர்தர்ப்பணம் செய்யும் நாளாகவும் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் .. தோஷம் நீங்கும் விரதமாகவும் .. சித்ராபௌர்ணமியில் பிறந்த சித்திரகுப்தர் விரதநாளாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது ..

இனி சித்ரகுப்தரின் புராணவரலாற்றினைக் காண்போம் -
அன்னை பார்வதிதேவி தன் கைத்திறமையால் அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தாள் .. அந்த ஓவியம் சாதாரண ஓவியமாக இல்லாமல் நிஜகுழந்தையைப் போல் தத்ரூபமாக இருந்ததைக் கண்ட சிவபெருமான் பார்வதியிடம் நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறிக்கொண்டே தன்கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சுக்காற்றை அந்த ஓவியத்தின் மேல் பதிக்கவும் .. ஓவியக்குழந்தை உயிர்பெற்று சிரிக்க ஆரம்பித்தது ..

தான் வரைந்த சித்திரக்குழந்தைக்கு சித்ரகுப்தன் என அன்னை பெயரிட்டாள் சித்திரத்திலிருந்து வந்தாலும் .. ரகசியத்தைக் காப்பவராக இருந்ததாலும் (குப்தன் ரகசியத்தைக் காப்பவன்) இப்பெயர் ஏற்பட்டது ..

யமதர்மராஜன் இறக்கும் ஜீவராசிகளை அழைத்துவரும்போது அவர்கள் செய்யும் பாவம் புண்ணியங்களுக்கு ஏற்ப நல்லபலன்களையும் தண்டனைகளையும் தரவேண்டும் என்பது ஈசனதும் .. விஷ்ணுவினதும் கட்டளை .. அதனை கண்டுபிடிப்பது
சிரமம் என்பது யமதர்மராஜனின் கவலை ....

அதனை நிவர்த்தி செய்தார் பிரம்மதேவன் .. சித்ரகுப்தனை
அறிமுகப்படுத்தியதன் மூலம் சித்ரகுப்தனே நாம் செய்யும் பாவம் புண்ணியங்களதும் கணக்கு வழக்கை எழுதி வருகிறார் ..

நாமும் பாவங்களைக் குறைத்து புண்ணியங்களை செய்து சித்ரகுப்தனை வணங்கிவர நாம் அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விமோசனம் பெறுவோமாக ..
“ ஓம் சித்ரகுப்தாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

Image may contain: 13 people


No comments:

Post a Comment