PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMI SARANAM..GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD BRIHASPATHI ..MAY THE GOD OF WISDOM ENLIGHTEN YOUR LIFE & MIND & RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES TOO .. " JAI SHREE BRIHASPATHI GURU DEV



” குணமிகு வியாழ குருபகவானே ! 
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் !
ப்ரஹஸ்பதி வியாழ பரகுருநேசா !
க்ரகதோஷமின்றிக் கடாக்ஷித் தருள்வாய் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று குரு பிரஹஸ்பதியைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கவும் குருபகவானைப் பிரார்த்திக்கின்றேன்
ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே !
க்ருணிஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ! ப்ரயதி தேவதா ! 
ஸஹித ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !!
குருவைப் பொறுத்தமட்டில் பெயர்ச்சி ஆவதற்கு முன்னரே பெயர்ச்சி பலங்களைக் காட்டிவிடக்கூடியவர் ..
அதனால் குருப்பெயர்ச்சிக்கு முன்னரும் .. அன்றும் .. பின்னரும் வழிபடுவதால் கேட்டவரம் பெற்று மனமகிழ்ச்சியை அடையலாம் ..
குரு சன்னிதியில் நின்று கோரிக்கைகளை மனதார நினைத்தாலே போதும் அவற்றை காலாகாலத்தில் நிறைவேற்றி நலம்பல பெறவைப்பார் என்பது ஐதீகம் ..
பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகள் உருவாக்கினார் .. அந்த 7 ரிஷிகள் மூலம் மனித .. அசுர இனங்கள் தோன்றின .. அந்த ஏழு ரிஷிகளில்
ஆங்கீரஸ முனிவரின் மகன்தான் பிரஹஸ்பதி எனும் வியாழ பகவான் ..
வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று லட்சியம் கொண்ட பிரஹஸ்பதி நான்கு வேதங்களையும் கற்று பல யாகங்களும் ஹோமங்களும் செய்தார் .. அஸ்வமேத யாகம் போன்ற சிறந்த யாகங்களை நூற்றுக்கும் மேல் செய்தார் .. இப்படி சிறப்பான ஹோமங்களைச் செய்து மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர் தான் தேவர்களுக்கு குருவாக முடியும் .. அதன்படி தேர்வு பெற்று பிரஹஸ்பதி தேவர்களுக்கு குருவானார் ..
அத்துடன் அவர் திருப்தி அடையவில்லை .. தேவகுருவைவிட சிறப்பான இடத்தை அடைய மேலும் பல அரிய ஹோமங்களும் .. யாகங்களும் செய்ததுடன் திட்டை தலத்துக்கு சென்று அங்கு கோவில் கொண்ட வசிஷ்டேஸ்வரரைக் குறித்து கடுந்தவமிருந்தார் .. அவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவருக்கு நவக்கிரக பதவியை வழங்கினார் .. அதன்படி நவக்கிரஹங்களில் சுபகிரகிரகமான குருபகவானாக ஏற்றம் பெற்றார் ..
குழந்தைகள் நல்லபடியாக படித்து முன்னேறவும் .. குருபகவான்தான் அருளவேண்டும் .. கல்வியில் முன்னேற்றம் .. வேத வேதாந்த சாஸ்திர அறிவு .. நல்ல புத்தி .. ஞாபகசக்தி அனைத்தையும் வழங்குபவர் குருபவானே .. படித்தேறிய குழந்தைகளுக்கு உரிய பதவியை வழங்குபவரும் .. குருபகவானே !
குருபகவானை மனதார போற்றி சங்கடங்கள் யாவும் களைவோமாக ! “ ஓம் ப்ரஹஸ்பதியே நமோஸ்துதே ! 
வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment