PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGANE POTRI POTRI.....GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE FRIDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF MAA LAKSHMI MAY YOUR SOUL BRIGHTEN UP WITH JOY & YOUR HOME LIGHTEN UP WITH HER DIVINE BLESSINGS .. " JAI MAA LAKSHMI "


” பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி 
மின்னு நவரத்தினம் போல் மேனி அழகுடையாள் 
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி 
தன்னிருபொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
அருள்நிறைந்த வெள்ளிக்கிழமையாகிய இன்று எல்லாவகை மங்களங்களையும் நமக்கு அருள்பவளும் 
வெறும் வார்த்தைகளால் அளந்துவிடமுடியாத எல்லையற்ற கருணைகொண்டவளும் .. என்றென்றும் ஆனந்தம் அளிப்பவளுமாகிய அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய மங்களகரமான நன்னாளாக மிளிரவும் .. சகலசௌபாக்கியங்களும் பெற்றிடவும் அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே !
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
அன்னை மஹாலக்ஷ்மிக்கு நிகழ்த்தும் அனைத்து வழிபாடுகளில் மனம் பூரிக்கின்றாள் .. ஏனெனில் அவள் சாந்தமும் .. சாந்நித்யமும் உடையவள் .. உலகெங்கும் நாம் காணும் அனைத்திலும் வியாபித்து விளங்குபவள் சர்வமங்களங்களுக்கும் அவளே காரணி !
அந்த காரணியை பரிபூரணியைக் குறித்த ஸ்தோத்திரங்கள் பற்பல .. அவற்றுள் ஆதிசங்கரர் அருளிய “ கனகதாரா ஸ்தோத்ரம்” வெகு சிறப்பானது .. 
அத்தகைய சிறப்புமிக்க கனகாதாரா ஸ்தோத்ரம் இன்னும் ஞானப்பொக்கிஷமாக விளங்குகின்றது ..
பிக்க்ஷை ஏற்க வந்திருக்கும் பாலகனுக்கு தமக்கென்று வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை 
“ பவதி பிக்ஷாம் தேஹி “ என வந்த பாலகனுக்கு இட்டார் அந்தப்பெண் .. “ இதைவிட நல்லதாக வேறு ஒன்றும் இல்லையே “ என்று மனவருத்தத்துடன் எண்ணிய எண்ணம்தான் அன்று அங்கே பொன்மழை பெய்யக்காரணமாக இருந்தது .. அதற்காகத்தான் வறுமையிலும் செம்மை என்று நம்முன்னோர்கள் சொல்லி வைத்தனர் .. அத்தகைய மனோதிடம் அமையுமானால் சற்றும் குறைவில்லாமல் அருள்மழை பொழிவாள் .. தாங்களும் அவற்றின் சில கண்ணிகளை இன்று படிப்பதாலும் தங்கள் இல்லங்களிலும் பொன் மழைபொழியட்டும் ..
1 - கீர்தேவதேதி கருடத்வஜ சுந்தரி 
சாகம்பரீதி சசிசேகர வல்லபேதி
ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேளிஸு ஸம்ஸ்திதாய
தஸ்யை நமஸ்திரிபுவனைக் குரோஸ் தருண்யை !
பொருள் - 
வாக்தேவி சரஸ்வதியாகத் திகழ்பவளே ! கருடனைக் கொடியில் கொண்ட சுந்தரியே ! சசிசேகரமூர்த்தியாகிய 
ஸ்ரீபரமேஸ்வரன் ஸ்ருஷ்டி .. ஸ்திதி .. சம்ஹாரம் எனும் மூன்றினையும் விளையாட்டாகச் செய்து கொண்டிருக்கும்போது அருகிருக்கும் சிவசக்தியாகவும் சாகம்பரியாகவும் திகழ்பவளே ! மூவுலகங்களுக்கும் குருவான ஸ்ரீமந்நாராயணனின் தேவியே ! போற்றி ! போற்றி !
2 - நமோஸ்து ஹேமாஅம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை 
நமோஸ்து தேவாதி தயாபராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை !
பொருள் -
தாமரை மலரில் வீற்றிருப்பவளே ! பூமண்டலத்தின் தனிப்பெருந்தலைவியே ! தேவர்களின் மீது தயைகொண்டவளே ! சாரங்கபாணியாகிய ஸ்ரீமந்நாராயணனின் தேவியே போற்றி ! போற்றி !
3 - நமோஸ்து காந்த்யை கமலேக்ஷ்ணாயை 
நமோஸ்து பூத்யை புவனப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை 
நமோஸ்து நந்தாமஜ வல்லபாயை !
பொருள் -
பேரொளிப்பிழம்பு என தாமரையில் திகழ்பவளே ! 
ஐஸ்வர்யங்களின் வடிவானவளே ! இப்பேருலகைப் படைத்தவளே !தேவர்களால் வழிபடப்படுபவளே ! 
நந்தகுமாரனாகிய ஸ்ரீமந்நாராயணனின் தேவியே ! போற்றி ! போற்றி !
“ ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment