GOOD MORNING...SWAMY SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD HANUMAN .. MAY HE BLESS YOU ON THIS SATURDAY WITH THE STRENGTH .. ENERGY & MAY HE GIVE YOU ABUNDANT POWERS TO CONQUER EVIL SPIRITS .. JAI SHREE RAM .. JAI SHREE HANUMAN ..


” ஆயுள் வளரும் உன்னாலே ! அழகும் வலிவும் உன்னாலே ! பாயும் நோயும் பல்பகையும் பறந்து போகும் உன்னாலே ! கோயில் எனது நெஞ்சமாம் ! கூறும்கவிதை மந்திரமாம் ! தேயம் தழுவும் புகழானே ! சித்தம் இரங்காய் அனுமானே “ 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
ராமநாமத்தையே சதாமனதில் கொண்டவனும் .. 
ராமபிரமத்தின் நாதபிரம்மமும் .. ராமனின் பிராணனாகிய சீதாபிராட்டியின் அன்பைப் பெற்ற தவசீலனுமாகிய ஸ்ரீஅனுமனைத் துதித்து தங்களனைவரும் கல்விவிருத்தி .. அறிவு விருத்தி மற்றும் மனநிம்மதியும் .. செல்வ வளமும் பெற்று பொன்னான வாழ்க்கை அமைந்திட வாயுபுத்ரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே !
ராமதூதாய தீமஹி !
தந்நோ அனுமன் ப்ரசோதயாத் !! 

சொல்லில் அடங்கா புகழவன் .. சொல்லின் செல்வன் .. அஞ்சனைப் புதல்வன் .. சிவனின் அவதாரன் அவன் அழகைக் காண கோடிகண்கள் வேண்டும் .. அவன் புகழ்பாடி வையகமே திரளவேண்டும் ..அனுமன் என்னும் நாமம் அனைத்திலும் தித்திக்கும் பாணம் .. வானுயர வளர்ந்தாலும் வானரன் தானுயரப்பார்ப்பதில்லை .. “ ராம” என்று ஒருமுறை உரைத்தால் போதும் கூனிக்குறுகி அணுவளவாய் மாறிவிடுவோன் .. 

எங்கள் ஆஞ்சநேயப் பெருமான் துணிவிலும் .. பணிவிலும் சிறந்தவர் .. ஸ்ரீராமபக்தியிலே உயர்ந்தவர் அன்பின் கடல் அறிவின் சுரங்கம் தன்நலம்கருதாத தனிப்பெரும்கருணை .. பொறுமையின் சிகரம் வீரத்தின் விளைநிலம் ஒருமுறை
“ ஓம் ஸ்ரீ ராமஜெயம்” சொன்னாலே சகலசெல்வங்களையும் அள்ளித் தருகின்ற வள்ளல் .. தன்னுடைய மார்பினைப் பிளந்து ஸ்ரீராமனையும் அன்னை சீதாபிராட்டியையும் காண்பித்த தெய்வம் .. 

பகவான் மஹாவிஷ்ணு ராமனாக அவதாரம் செய்தபோது சீதையை மீட்பதற்கு அவரது சீடரான அனுமன் உறுதுணையாக இருந்தார் .. அவருக்கு நன்றிக்கடன்பட்டவராக இருந்த மஹாவிஷ்ணு அனுமன் தன்னிடம் கொண்டிருந்த அன்பிற்கு அடையாளமாக இந்த உலகம் உள்ளவரை உன் புகழும் பூமியில் நிலைத்திருக்கும் .. உனக்கு எவ்வளவு கொடுத்தாலும் நான் உனக்கு என்றும் கடனாளியாகத் தான் இருப்பேன் என்றார் .. 

அனுமானை வணங்கினால் மஹாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை .. 
அனுமன் இன்றி ஸ்ரீராமன் இல்லை ! ஸ்ரீராமன் இன்றி அனுமன் இல்லை ! 
வாழ்க ஸ்ரீராமநாமம் ! வளர்க ஸ்ரீராமபக்தி ! 
நல்லன எல்லாம் தரும் ‘ராம’ நாமத்தை நாளும் ஜபிப்போமாக ! ஸ்ரீராமஜெயம் ! 
வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் ..
 
Image may contain: 2 people, people sitting and text



No comments:

Post a Comment