கையளவு இதயத்தில்
மலையளவு நம்பிக்கை கொண்டேன்
உன்னருளை பெற்றதனால்
உள்ளுவகை அடையலானேன்
உன்னழகு முகம் கண்டபின்னர்
பூவுலகே மறந்து போக
என் நிலையை எனக்குணர்த்தியவனே
தன்னிகர் இல்லாக் குருவே
கண்உறங்கும் வேளை தனிலும்
கனவிலும் நீயே குருவே
தன்னிறைவு அடைந்தேன் உன்னாலே
தனக்குவமை இல்லாதானே போற்றி
எண்ணியது கைப்பட எண்ணிலேன் குருவே
உன் கண்ணிமைக்குள் சிறையிட்டெம்மைக்
காக்கவேண்டும் குருவே
பண்ணமைக்க ஆவல் கொண்டென்னை
கருவியாக்கிய கண்கண்ட குரு நீ
விண் தந்த கொடை தானன்றோ
வேறென்ன பகர்வேன் அடியேன்
மலையளவு நம்பிக்கை கொண்டேன்
உன்னருளை பெற்றதனால்
உள்ளுவகை அடையலானேன்
உன்னழகு முகம் கண்டபின்னர்
பூவுலகே மறந்து போக
என் நிலையை எனக்குணர்த்தியவனே
தன்னிகர் இல்லாக் குருவே
கண்உறங்கும் வேளை தனிலும்
கனவிலும் நீயே குருவே
தன்னிறைவு அடைந்தேன் உன்னாலே
தனக்குவமை இல்லாதானே போற்றி
எண்ணியது கைப்பட எண்ணிலேன் குருவே
உன் கண்ணிமைக்குள் சிறையிட்டெம்மைக்
காக்கவேண்டும் குருவே
பண்ணமைக்க ஆவல் கொண்டென்னை
கருவியாக்கிய கண்கண்ட குரு நீ
விண் தந்த கொடை தானன்றோ
வேறென்ன பகர்வேன் அடியேன்
No comments:
Post a Comment