PANVEL BALAGAN PATHAM POTRI....GURUVE SARANAM SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD SHIVA .. MAY HE RELIEVE YOU FROM ALL SINS & PAINS FROM yOUR LIFE & SHOWER YOU WITH GOOD HEALTH WEALTH & PROSPERITY .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH ..


” நின்னருளாலே நின் தாள் பற்றினேன் ! நீயல்லால் இங்கு மெய்த் தாதையுண்டோ .. திருவடியல்லால் துணையும் உண்டோ .திருநீறல்லால் காப்பும் உண்டோ 
திருமந்திரமில்லால் படையும் உண்டோ .. திருமந்திரமல்லால் படையும் உண்டோ .. திருவருள் அல்லால் நிழலும் உண்டோ தோள்திகழ் நீற்றனாய் 
என்முன்தோன்றிச் சுந்தரநீற்றை எனக்கணிவித்து நாயோன் என்னைத் தூயோன்ஆக்கி எமை ஆட்கொள்க
எம்மான் நீயே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
திங்கட்கிழமையாகிய இன்று சோகங்களைப் போக்கி சுகங்களைத் தரவல்ல சோமவாரவிரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. இந்நாளில் சிந்தையில் உறையும் சிவனின் அன்பிற்கு உரியவர்களாகி வாழ்வில் சுபீட்சமும் .. மகிழ்ச்சியும் .. என்றென்றும் வெற்றிகளையும் பெற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
அனைத்திற்கும் மூலமாக விளங்கும் சிவபெருமானின் உச்சம் பெற்ற நாள் திங்கட்கிழமையாகும் .. திங்கள் எனில் சந்திரனைக்குறிக்கும் .. சந்திரனைத் தலையில் சூடிய சிவன் சோமசுந்தரர் என்றழைக்கப்படுகிறார் .. கணவனும் மனைவியும் ஒற்றுமையுடனும் தீர்க்காயுசுடன் வாழவும் .. இந்த விரதத்தை கடைபிடிக்கலாம் .. குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் விரதமுமாகும் ..
விரதமிருப்பது மட்டும் முக்கியமில்லை நீங்கள் எதற்காக விரதம் இருக்கிறீர்கள் என்று மனைவி புரிந்து கொள்ளவேண்டும் .. சின்னச்சின்ன சண்டையிடாமல் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும் .. கணவன் மனைவியிடமும் .. மனைவி கணவனிடனும் செலுத்தும் அன்பு அகலாமல் வாழ்வதும் ஒருவிரதமே !
இவ்விரதத்தை கடைபிடிப்பதன்மூலம் அனைத்து பாபங்களும் அகலும் .. நோய் அண்டாது சிவபெருமானை நினைந்து அனுஷ்டிக்கப்படும் இந்த விரதம் ஈசனின் அருளைப்பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும் விரதமுறையாகும் ..
தட்சனின் சாபத்துக்குள்ளாகிய சந்திரன் தன்பொலிவை இழந்து ஒளிதேய்ந்து போவதையறிந்து வேதனையடைந்து சிவபெருமானை சரணடைந்தான் ..
சிவபெருமானும் சந்திரனை தன்னுடைய தலையில் சூடி பாதிநாள் வாளர்ந்தும் .. பாதிநாள் தேய்ந்தும் இருக்கும்படி சாபத்தை மாற்றி அமைத்தார் ..
இவ்வாறு சந்திரனின் சோகத்தைப்போக்கி சுகம்பெறச்செய்த சிவபெருமானிடம் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடிப்பவர் வாழ்விலும் சுகங்கள் பெருகவேண்டும் .. என வேண்டிட் சிவனும் அவ்வாறே வேண்டுதலை தந்தருளினார் ..
சிவனைப்போற்றுவோம் ! இல்லாமை என்ற ஒன்றை இல்லாமல் செய்து அனைத்து வளநலங்களையும் தந்தருள்வாராக .. வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person


No comments:

Post a Comment