” மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின்மீதும் தண்ணிறை ஜலத்தின்மீதும் சாரிசெய் ஊர்திமீதும் விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை நண்ணிவந்து அருளார் சஷ்டிநாதன் வேல்காக்க “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கலியுகவரதானாம் கந்தனுக்கு உகந்த சஷ்டித்திதியும் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கூடிவருவது சிறப்பாகும் .. கந்தப்பெருமானைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாகவும் கிரகதோஷங்கள் யாவும் நீங்கப்பெற்று சகலயோகங்களும் .. நலன்களும் பெற்று நிம்மதியான வாழ்வு மலர்ந்திட முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
முருகனுக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை என்றும் துதிப்பதன்மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமின்றி ஸ்ரீகுருபகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்வு மென்மேலும் சிறந்து விளங்கும் ..
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன் .. செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைந்து விரதமிருந்தால் மனதிலும் .. குடும்பத்திலும் அமைதி நிலவும் .. வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் செவ்வாய்க்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார்கள் .. அவர் திருத்தணிகை முருகனையும் கந்தக்கோட்டை முருகனையும் முதல்நிலை கடவுளாகக் கொண்டிருந்தார் ..
சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஆறாம் நாளாகும் .. ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம் .. கடன் .. விரோதம் .. சத்ரு .. போன்றவைகளைக் குறிக்கும் .. செவ்வாய் ரோகக் காரகன் .. இந்த எல்லா தோஷங்களையும் போக்கும் பெருமான் முருகனே !
கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக்கூடிய ஒன்று .. போரில் யுத்தவீரர்கள் தன் உடலைக்காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள் .. இங்கு கந்தசஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் .. கஷ்டத்திலிருந்தும் காத்தருளுகிறது .. இதனை அருளியவர் ஸ்ரீதேவராய ஸ்வாமிகள் .. பெரிய முருகபக்தரும் தன் ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தவர் .. அவர் மிகவும் எளியமுறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார் .. இதனை தினம் காலையிலும் .. மாலையிலும் பாராயணம் செய்ய முருகனே ! நேரில் வந்து காட்சித்தந்தருளுவானாம் ..
முருகனை நாமும் நம்பிக்கையுடன் வணங்கிட புனிதகங்கைபோன்று ஆறாக அருள்மழைபெய்து அவகுணங்களை அடியோடு அழித்து .. ஞானானந்த பிரகாசத்தில் நம்மை ஆழ்த்தி .. முக்தியை எய்திட வழிகாட்டுவான் என்பதனை உணர்வோமாக ..
“ ஓம் சரவணபவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment