PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD VISHNU .. MAY HIS ETERNAL BLISS BRINGS YOU EVERY SUCCESS & BEST HEALTH .. WEALTH & HAPPINESS TOO - " OM NAMO NAARAAYANAAYA "PANVEL BALAGANE SARANAM IYYAPPA..GURUVE SARANAM SARANAM


” அஸ்ய யஜமானஸ்ய தைர்ய ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்ய அபிவிருத்த யர்த்தம் இஷ்ட காம்யார்த்த சித்தயர்த்தம் .. பாகவத ப்ரீதயர்த்தம் ஸ்ரீபூமி நாயிகா சமேத ஸ்ரீஒப்பிலியப்ப ஸ்வாமி திவ்யசரணார விந்தயோஹோ ஸமஸ்தலோக சாந்தயர்த்தம் துளசீதள குங்குமார்ச்சன சகஸ்ரநாம பூஜாம் க்ரிஷ்யே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
புதன்கிழமையும் திருவோண நட்சத்திரமும் கூடிவரும் இந்நாள் பகவான் நாராயணனுக்கு உகந்த சிறப்புமிக்க நன்னாளாகும் .. தங்களனைவரது வேண்டுதல்கள் யாவும் வேண்டியவாறே நிறைவேறிடவும் .. கல்விச்செல்வம் .. கேள்விச்செல்வம் மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் பெருகிடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
ஸ்ரவணவிரதம் (சிரவண) என்பது மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு மேற்கொள்ளப்படும் ஒரு விரதமாகும் .. இந்நாளில் விரதமிருந்து உப்பில்லாத உணவை பகவானுக்கு படைத்தபின்னர் அதனை உண்டு விரதம் முடிப்பதே ஸ்ரவணவிரதமாகும் .. பூமிநாச்சியார் பகவானுக்கு சமைக்கும்போது உப்புபோட மறந்துவிட்டமையால் பெருமாளுக்கு உப்பில்லாமலே படைப்பதாக ஐதீகம் ..
“ மாம் ஏகம் சரணம் வ்ரஜ “ என்று கைகாட்டி அழைக்கும் பொன்னப்பன் .. மணியப்பன் .. ஒப்பார் மிக்கார் இல்லாத ஒப்பிலியப்பனின் வலக்கையில் சரமச்லோகப்பகுதி வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது .. இதன் பொருள் -
“ என்னை சரணடைந்தால் .. உன்னை நான் காப்பேன் “ என்பதே !
திருமகள் நாயகனாம் திருமால் அச்சாவதாரம் கொண்டு விளங்கும் 108 திவ்யதேசங்களில் ஒன்றான நெஞ்சை அள்ளும் தஞ்சைமாவட்டத்தில் திருவிண்ணகர் என்று போற்றப்படும் துளஸீவன ஷேத்ரத்தில் எம்பெருமான் “ தன் ஒப்பார் இல் அப்பனாக” எழுந்தருளியுள்ளார் .. இத்தலத்திற்கு பக்தர்கள் வந்து ஸ்ரீனிவாசனை சரணடைந்தால் அவரது அருளை பரிபூரணமாய் பெறுவது திண்ணம் .. 
ஒப்பிலியப்பனை துளசியால் அர்ச்சிப்பவர் ஒவ்வொரு இதழுக்கும் அசுவமேதயாகம் செய்தபலனை பெறுவர் ..
“ ஆளவந்தாயோ ! அடியார் மனராஜ்யம் தொட்டு ஆளவந்தாயோ..? அடியார் படுதுயரம் தூளாகும் பூரணசந்திரவதனா ! வரதா ! வைகுண்டநாதா ! ஸ்ரீனிவாஸா ! நின்பாதம் சரணடைந்தோம் காத்தருள்வாயாக ”
“ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment