PANVEL BALAGAN PATHAM POTRI....GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE ASHTAMI THITHI TOO .. MAY LORD BHAIRIVA PROTECT YOU FROM ALL THE EVIL FORCES & SHOWER YOU WITH GOOD FORTUNE .. BEST HEALTH & HAPPINESS .. " JAI SHREE BHAIVA DEV "



” பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் 
பூரணங்கள் நான் என்பான் .. நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நணினில் பூட்டிடுவான் .. 
காகங்கள் கடந்து கட்டிவிடும் மாயம் யாவையும் போக்கிடுவான் .. தனக்கிலையீடு யாருமே என்பான் 
தனமழை பெய்திடுவான் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று வாழ்வை வளமாக்கும் ஸ்ரீகாலபைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமித்திதியும் அனுஷ்டிக்கப்படுகின்றது ..தாங்கள் இழந்த பொருள் செல்வத்தை மீண்டும் பெறவும் .. தடைபட்ட அனைத்து காரியங்களும் வெற்றிபெறவும் 
காலபைரவரைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே ! 
சூலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !!
இந்துசமயத்தில் பைரவர் வழிபாடு முக்கியமானது .. சூரபத்மனை அழிப்பதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் முருகன் .. அதுபோல் பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவனின் தத்புருஷ முகத்திலிருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர் ..
காவல்தெய்வமான இவரும் சிவனைப்போல் படைத்தல் .. காத்தல் .. அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்துவருகிறார் .. திரிசூலபாணியான இவர் நீலநிறமேனியுடன் நிர்வாணகோலத்தில் நாய்வாகனத்துடன் காட்சிதருவார் ..சிவாலயங்களில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் இவருக்கு தனி சன்னிதி உண்டு .. காலையில் ஆலயம் திறந்தவுடனும் 
இரவு அர்த்தஜாம பூஜை முடியும் போதும் இவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும் ..
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் .. தன்னை நாடிவரும் பக்தர்களின் பாவத்தை போக்குபவர் என்று பொருள் .. தினமும் வேதனையை அனுபவிப்பவர்கள் .. தாங்கமுடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களும் அவற்றிலிருந்து விடுபட பைரவரை வழிபடுவார்கள் ..
பைரவரை தொடர்ந்து வணங்கினால் தீவினைகள் அழியும் .. எதிரிகள் தொல்லை ஒழியும் .. யாரும் அடிபணியாத தலைகுனியாத வாழ்க்கை அமையும் .. நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்கும் .. வறுமை நீங்கி செல்வச்செழிப்பு உண்டாகும் ..
ஸ்ரீபைரவருக்கு பௌர்ணமிக்குப் பின் வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கி நல்லருள் கிட்டும் .. 
பஞ்சதீபம் என்பது - இலுப்பை எண்ணை .. 
விளக்கு எண்ணை .. தேங்காய் எண்ணை .. நல்லஎண்ணை .. பசுநெய் ஆகும் .. இவற்றைத் தனித்தனி தீபமாக அகல்விளக்கில் ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனியாக ஏற்றி வழிபட எண்ணியகாரியங்கள் நிறைவேறும் ..
பைரவரைப் போற்றுவோம் ! வாழ்வில் ஏற்றம் காண்போம் ! ஓம் ஸ்ரீமஹாபைரவாய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


No comments:

Post a Comment