PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE FRIDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA LAKSHMI .. MAY ASHTALAKSHMI 'S PROTECTIONS FROM EVILS AS WELL AS ABUNDANT GRACE & BLESSINGS FOR A HAPPY & PROSPEROUS LIFE TOO .. " JAI MATA DI


Image may contain: 1 person, indoor



” செந்தாமரைப்பூவில் அமர்ந்தவளே ! 
செந்தூரத் திலகம் அணிந்தவளே ! சுந்தரி பார்வதி பாமகளும் சொந்தமுடன் நினைக்கும் பூமகளே !
உன்பாதம் எந்நாளும் தஞ்சமே திருமகளே !
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே ! அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மியே தாயே ! 
அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே ! செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே ! உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
ஒளிமயமான அன்னை மஹாலக்ஷ்மியை மங்களகரமான வெள்ளிக்கிழமையாகிய இன்று பக்திசிரத்தையுடன் துதித்து அன்னையின் அருட்கடாக்ஷ்மும் .. நீண்ட ஆயுளும் மற்றும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்றிடவும் அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !!
நினைத்த செல்வங்களைப் பெறவும் .. பெற்ற செல்வங்கள் நிலைக்கவும் .. தங்கள் இல்லம் தேடிவரும் அன்னை மஹாலக்ஷ்மியை மனதாரப் பணிந்து அஷ்ட ஐஸ்வர்யம் அருளும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் சொல்லி அன்னையை வரவேற்போமாக !
1 - மஹாலக்ஷ்மி 
யாதேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மிரூபேணே ஸம்ஸ்த்திதா ! நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ !
பொருள் - எல்லா உயிரினங்களிலும் ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்
2 - தனலக்ஷ்மி - 
யாதேவி ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா 
நமஸ்தஸ்யை .. நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ !
பொருள் - சகல உயிர்களிடமும் புஷ்டி(நிறைவு) உருவத்தில் உள்ள தனலக்ஷ்மியை வணங்குகிறேன்
3 - தான்யலக்ஷ்மி - 
யாதேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோநமஹ !
பொருள் - எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும் தான்ய உருவில் உள்ள தான்யலக்ஷ்மியை வணங்குகிறேன் ..
4 - வித்யாலக்ஷ்மி -
யாதேவி ஸர்வபூதேஷு புத்திரூபேணே ! ஸம்ஸ்த்திதா.. நமஸ்தஸ்யை ,, நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ !
பொருள் - எல்லா உயிரினங்களும் புத்தி உருவில் உள்ள வித்யாலக்ஷ்மியை வணங்குகிறேன் ..
5 - வீரலக்ஷ்மி -
யாதேவி ஸர்வபூதேஷுத்திருதி ரூபேணே ஸம்ஸ்த்திதா .. நமஸ்தஸ்யை .. நமஸ்தஸ்யை .. நமஸ்தஸ்யை நமோ நமஹ !
பொருள் - எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள வீரலக்ஷ்மியை வணங்குகிறேன் ..
6 - சௌபாக்யலக்ஷ்மி -
யாதேவி ஸர்வபூதேஷு துஷ்டிரூபேணே ! ஸம்ஸ்த்திதா .. நமஸ்தஸ்யை .. நமஸ்தஸ்யை .. நமஸ்தஸ்யை நமோ நமஹ !
பொருள் - எல்லா உயிரினங்களிலும் துஷ்டி(மகிழ்ச்சி)
உருவில் உள்ள சௌபாக்யலக்ஷ்மியை வணங்குகிறேன் ..
7 - ஸந்தானலக்ஷ்மி -
யாதேவி ஸர்வபூதேஷு மாத்ரு ரூபேணே ஸம்ஸ்த்திதா .. நமஸ்தஸ்யை .. நமஸ்தஸ்யை .. நமஸ்தஸ்யை நமோ நமஹ !
பொருள் - எல்லா உயிரினங்களும் தாய் உருவில் உள்ள ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன் ..
8 - காருண்யலக்ஷ்மி -
யாதேவி ஸர்வபூதேஷு தயாரூபேணே ! ஸம்ஸ்த்திதா .. நமஸ்தஸ்யை .. நமஸ்தஸ்யை .. நமஸ்தஸ்யை நமோ நமஹ ..
பொருள் - எல்லா உயிரினங்களிலும் தயையுருவில் உள்ள காருண்யலக்ஷ்மியை வணங்குகிறேன் ..
” ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 




Image may contain: indoor

தேனும் பாலும் உமக்கு அபிசேகம் 
தெவிட்டாத உன் நாமம் எமக்கு பிரசாதம்
நெஞ்சில் குடியிருந்து எனக்கு வழி காட்டுகிறாய் 
அஞ்சேல் எனச் சொல்லி ஆறுதல் தருகிறாய்.
சோதனை தருவது எம்மைச் சோதிக்கவே 
ஆதவன் போல் வருவான் எமைக் காக்க கரம் விரித்தே
குரலிலே இனிமை உன் நாமம் சொல்கையிலே 
நடையிலே துணிவு உன் அருள் கிடைத்த பின்னே
நேசம் எனும் பூவின் வாசமறிந்தேன் 
உன் அருள் சுவாசித்த பின்பே
உன் அருளெனும் தீக்குள் நுளைய பீனிக்கஸ் பறவையாகிறேன் உன் கருணையினாலே சாம்பலில் இருந்து உயிர்த்தெழுகிறேன்
உன் கருணையெனும் கடலில் குளித்து பாவம் போக்க நல் முத்தெனும் முக்தி அடைகிறேன் 
உன் பெருமை பேச எனக்கொரு வரம் தருவாய்

No comments:

Post a Comment