PANVEL BALAGANE SARANAM IYYAPPA...SATGURUNADHANE SARANAM IYYAPPA........GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY WEEKEND WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD HANUMAN .. MAY HE SHOWER YOU WITH GOOD STRENGTH .. POWER & WISDOM & FULFILL ALL YOUR DESIRES TOO .. " JAI SHREE RAM ! JAI SHREE HANUMAN


அஞ்சிலே ஒன்று (வாயு) பெற்றான் 
அஞ்சிலே ஒன்றை (கடல்.. நீர்) தாவி 
அஞ்சிலே ஒன்றாக (ஆகாயத்தில் பறந்து) ஆரியர்க்காக ஏகி ! அஞ்சிலே ஒன்று (பூமி .. மண்) பெற்ற 
அணங்கைக் கண்டு அயலார் ஊரில் 
அஞ்சிலே ஒன்றை (நெருப்பு) வைத்து அவன் நம்மை அளித்துக்காப்பான் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்த்ரா என்ற வானரத் தலைவனும் .. தாமே எமை தேடிவந்து ரட்சிக்கும் தெய்வமும் .. ராமனுக்கு இனியவனுமாகிய அனுமனைப் போற்றித் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகத் திகழவும் .. சனிக்கிரகத்தின் பாதிப்பு குறையவும் மனோபலன் ... உடல்பலம்பெற்று சீரும் சிறப்பும் அடையவும் வாயுபுத்ரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ! 
ராமதூதாய தீமஹி ! 
தந்நோ அனுமன் ப்ரசோதயாத் !!
அஞ்சனையின் மகனாக அவதரித்தவரும் .. தெய்வீக புருஷரும் .. மார்கழிமாத மூலநட்சத்திரத்தில் பிறந்தவரும் .. அனந்தன் என்னும் ஆதிசேஷனால் போற்றி வணங்கப்படுபவராகிய ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும் ..
அனுமனுக்கு பிடித்த அர்ச்சனை பொருட்கள் வடைமாலை .. வெற்றிலைமாலை .. துளசிமாலை .. சிந்தூரம் .. பசுநெய் .. பழங்கள் ..
ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராமகடாக்ஷ்ம் பெற்று நல்ல கல்வி செல்வம் பெறலாம்
அசோகவனத்தில் சீதையைக்கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தபோது மகிழ்ந்த சீதை அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி அனுமனின் சிரசில் தூவி ஆசீர்வதித்தாள் .. 
“ இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும் என்று “ 
வெற்றிலையைக் காரணமாக்கி ஆசீர்வதிதமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றிபெற வெற்றிலைமாலை ஆஞ்சநேயருக்கு சாத்துகின்றனர் ..
திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது மணமக்களுக்கும் அவர்களை ஆசீர்வதிக்க வந்தவர்களது வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையவேண்டும் என்பதற்காகத்தான் ..
வடைமாலை அணிவித்து தானம் செய்தால் செல்வ வளம் பெருகும் .. கிரகதோஷம் நீங்கும் ..
ராம.. ராவண யுத்தத்தின்போது ராமனையும் லக்ஷ்மனனையும் தன் தோளில் சுமந்துகொண்டு அனுமன் சென்றபோது ராவணனின் சராமாரியாகத் தொடுக்கப்பட்ட சக்திமிகுந்த அம்பால் தாக்கப்பட்டதால் அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணை பூசிக்கொண்டாராம் .. வெண்ணை சீக்கிரமாக உருகும் தன்மை உடையது .. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்தகாரியம் நடந்துவிடும் என்ற நம்பிக்கை .. அதனால் வெண்ணை சாத்தும் பழக்கம் ஏற்பட்டது ..
அனுமன் இன்றி ஸ்ரீராமன் இல்லை ! ஸ்ரீராமன் இன்றி அனுமன் இல்லை ! வாழ்க ஸ்ரீராமநாமம் ! வளர்க ஸ்ரீராமபக்தி ! ஜெய்ஸ்ரீராம் ! ஜெய் ஸ்ரீஹனுமான் ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


No comments:

Post a Comment