PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...PANVEL BALAGANE POTRI POTRI...SATGURUNADHANE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS - WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD SURYA .. MAY HE PROTECT YOU FROM ALL THE EVIL FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD FORTUNE .. BEST HEALTH & HAPPINESS TOO .. " JAI SHREE SURYA DEV "




” அறமாதி தருபானு கவசநூல் வைகறையில் அமர்ந்து போற்றில் திறமாகும் தேவரொடும் அறிஞர் புகழப்படுவார் சித்தத்துள்ளே உறமேதும் பொருள் பெறுவர் .. கிரகபயம் ஒழிவர் .. உயிர் உடல் நீங்கில் பெறலாய கனலிபதம் பெற்று உய்வர் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானுக்கு உகந்த நாளுமாகும் .. தாமரைமீது வீற்றிருக்கும் ஆதவனைத் துதித்து அனைவர்மீதும் கருணைகூர்ந்து அனைத்து தோஷங்களையும் .. வெப்பத்தையும் குறைத்தருள்வாயாக என்று பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!
தேவர்கள் தமது சித்தாந்த முறைப்படி சூரியனை வழிபடுவர் .. 
சாரணர்கள் சொற்களாலும் .. 
கந்தர்கள் காணமிசைத்தும் துதிப்பர் ..
நாகர்கள் அடிபணிந்து வணங்குவர் ..
பைசாசர் மனதை அடக்கி வழிபடுவர் .. 
சாக்கியர் தமது ஆகமவிதிப்படி பூஜிப்பர் .. 
மகரிஷிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மனதால் துதிப்பர் ..
யோகியர் ஆத்மசொரூபமே சூரியன் என உணர்ந்து அன்புடன் கும்பிடுவார்கள் .. விடியற்காலையில் எல்லோராலும் இவ்வாறு நமஸ்கரிக்கப்படும் பகலவன் எங்களையும் காத்து கருணைமழை பொழிவானாக ..
சூரிய ஜெயந்தி காரணநிகழ்வு - புராணவரலாறு -
காஷ்யப முனிவரின் மனைவி அதிதி .. கணவனுக்கு உணவளித்துக் கொண்டிருந்த காரணத்தினால் வாசலில் யாசகம் கேட்ட அந்தணருக்கு மெதுவாக சென்று உணவளித்ததால் கோபமுற்ற அந்தணர் .. எந்தக்கர்ப்பத்தைக் காக்க மெதுவாக வந்து யாசகமிட்டாயோ அந்தக் கர்ப்பம் கலைவது என சாபமிட்டார் .. முனிவரிடம் நடந்ததைக் கூற காஷ்யப முனிவர் சிவபெருமானைத் தியானித்து ஏழு எருக்க இலைகளை அவள் தலையிலும் .. தோள்களிலும் வைத்து சூரியன் முன் சிறிதுநேரம் நிறுத்தி வணங்கி நீராடச்செய்தார் ..
அமுதம்போல் அனைவரையும் வாழவிக்கும் மகன் பிறப்பான் என ஆசிகூறினார் .. அவ்வண்ணமே சூரியபகவான் ரதசப்தமியன்று தோன்றினார் .. அதனால் அன்று அவரது ஜெயந்தி கொண்டாடப்படுகிறது ..
சூரியனைப் போற்றுவோம் ! மழையாகப் பொழிந்து எம்மனதை குளிர்விப்பானாக ! 
“ ஓம் சூயபகவானே ! நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: 1 person, ocean, sky, cloud and outdoor

No comments:

Post a Comment