PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

swamiye saranam iyyappa...guruve saranam saranam.....PANVEL BALAGAN PATHAM POTRI. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE " APARA EKADASI " VIRADAM TOO .. MAY LORD MAHAVISHNU BLESS YOU & RELIEVE YOU FROM ALL SINS & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. WHO EVER FAST ON THIS APARA EKADASI IS FREED OF GREAT SINS & BECOMES FAMOUS ALL OVER THE UNIVERSE .. " OM NAMO NAARAAYANAAYA "





” துப்புடையாரை அடைவதெல்லாம் 
சோர்விடத்துத் துணையாவரென்றே !
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் 
ஆனைக்கு நீ அருள் செய்தமையால் !
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு 
எதும் நானுன்னை நினைக்கமாட்டேன் !
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் 
அரங்கத் தரவணைப் பள்ளியானே “ 
(நாலாயிரத் திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
திங்கட்கிழமையாகிய இன்று ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த ஏகாதசி விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. இன்றைய ஏகாதசித் திதியை ..” அபரா ஏகாதசி “ என்றழைப்பார்கள் “ தங்களனைவரின் அனைத்துச் செயல்பாடுகளிலும் வெற்றி கிட்டிடவும் .. பாபங்கள் துன்பங்கள் யாவும் களைந்திடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
அபரா ஏகாதசி விரதம் மனிதர்கள் கடைபிடிக்கவேண்டிய விரதங்களில் அவசியமான ஒன்றாகும் .. இவ்விரதம் மற்ற விரதங்களைவிட சிரேஷ்டமானதும் .. உத்தமமானதாகும் .. அபரா ஏகாதசி நாளன்று பக்திபூர்வத்துடன் பகவான் மஹாவிஷ்ணுவை ஆராதிக்கவேண்டும் .. அதனால் இறுதியில் விஷ்ணுலோகப் பிராப்தியை மக்கள் பெறுவர் ..
அபரா என்றால் - அபாரமான அதாவது அபரிமிதம் என்று அர்த்தம் .. இந்த ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிப்பவர்களும் அதன் மஹிமையைப் படிப்பவர்களும் பகவானின் அபரிமித கருணைக்குப் பாத்திரமாவார்கள் .. அத்துடன் பக்தி மற்றும் சிரத்தையிலும் வளர்ச்சியையும் காண்பார்கள்
கஜ (யானை) தானம் .. அஸ்வம் (குதிரை) தானம் யக்ஞத்தில் ஸ்வர்ணதானம் இவற்றில் கிட்டும் புண்ணியபலனுக்கு இணையான புண்ணியபலனை அபரா ஏகாதசி விரதத்தின் மூலம் பெறுவர் .. இவ்விரதமானது பாபவிருட்சத்தை அழிக்கும் கோடரிபோன்றதாகும் ..பாபவினைகள் சூழ்ந்து இருண்டிருக்கும் உலகத்திற்கு இருட்டை விலக்கி ஒளியை வழங்கும் சூரியனைப் போன்றதாகும் ..
இந்நாளில் பக்திபூர்வத்துடன் நாமும் பகவானை ஆராதித்து விஷ்ணுலோகப் பிராப்தியையும் பெறுவோமாக ! ஓம் நமோ நாராயணாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

No comments:

Post a Comment