PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE DIVINE " PRADOSHAM " TOO .. PRADOSHA TIMES ARE THE WINDOWS OF OPPORTUNITY TO REMOVE KARMA OR KARMIC ENERGIES THAT LIMIT US FROM ENJOYING UNLILIMTED POTENTIALS IN THIS CURRENT LIFE .. BE IN A MEDITATIVE STATE OF MIND DURING PRADOSHA TIME (4.30 - 6.00 EVENING) & CHANT THE POWERFUL MANTRA " OM NAMASHIVAYA " & PARTICIPATE IN THE PRADOSHAM RITUALS & REMOVE ALL YOUR NEGATIVE KARMA BY RECEIVING THE BLESSINGS OF LORD SHIVA .. " OM NAMASHIVAAYA "


” நந்தியம் பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு புந்தியில் ஞானம் சேரும் ! பொலிவுறு செல்வம் கூடும் ! குலமுறை தழைத்தே ஓங்கும் குணம் நிறை மக்கள் சேர்வர் ! சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
செவ்வாய்க்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்தவேளையே பிரதோஷவேளையாகும் .. மாலை 4.30 - 6.00 மணிவரையிலான வேளையில் ஆலயம் சென்று நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கூடாக சிவபெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக்கண்டு தரிசிக்க தங்கள் வாழ்வில் பாவம் விலகி புண்ணியம் சேரும் .. மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கி மனதில் அமைதி குடிகொள்ளவும் எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பிரதோஷம் என்பது சைவசமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும் .. இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷவழிபாடு எனவும் அழைக்கப்படுகின்றது
புராணக்கதை -
மானிடர்கள் மட்டுமல்லாமற் பட்சிகள் தொடங்கி முப்பத்து முக்கோடித்தேவர்களின் தலைவனாகக் கூறப்படுபவன் தேவேந்திரன் .. துர்வாச முனிவரின் சாபத்தினால் தன் செல்வங்களை இழந்த இந்திரன் தேவகுருவின் ஆலோசனைப்படி பாற்கடலைக் கடைந்து ஐராவதம் .. பரிவாரம் முதலிய செல்வங்களை மீட்கத் திட்டமிட்டான் ..
பாற்கடலை கடைவது இயலாத காரியமென அறிந்த தேவேந்திரன் அசுரபலத்தையும் நாடினார் .. பாற்கடலை கடையத் துணைபுரிவதால் என்றும் மரணமெய்யா நிலைதரவல்ல அமிழ்தத்தில் தமக்கோர் பங்கு கிடைக்குமென எண்ணி ஒப்புகொண்டனர் அசுரர்கள் .. பாற்கடலில் பள்ளிகொண்டருளும் நாராயணனார் தனது இரண்டாவது அவதாரமாகிய கூர்மாவதாரமெடுக்க தருணம் வந்தமையறிந்து தேவேந்திரனுக்கு உதவிட எழுந்தருளினார் ..
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்பொழுது ஆலகாலம் எனும் விஷம்வெளிப்பட அதனைக்கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை தங்களை காத்தருளும்படி வேண்ட சிவபெருமானும் அதனை உண்ண எல்லா உயிர்களுக்குள்ளும் உறைபவனாம் சிவனின் உடலில் நஞ்சு சேர்ந்தால் சகல உயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சிய பார்வதிதேவி ஓடிவந்து சிவனாரின் கண்டத்தையிருகப் பற்றிட கண்டத்திலேயே உறைந்து போனது ஆலகாலம் ஆலகாலத்தின் சூட்டினாலும் .. விஷத்தினாலும் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட நீலகண்டரென திருப்பெயர்ப் பெறலானார் ஈசன் ..
இவ்வாறு கயிலையில் சகல தேவ அசுரபடை சூல அபயந்தேடி ஒன்றாக கூடியிருக்கின்ற வேளையில் 
(4.30 - 600 மாலையில்) நாமும் ஆலயத்தினுள் இருக்க வரவிருக்கின்ற அபாயம் ஆலமேயாயினுங் ஈசனின் திருவருளால் மறைந்துபோகுமென்பது உறுதி ..
பிரதோஷ புண்ணிய வேளையில் எம்பெருமானையும் 
நந்தீஸ்வரரையும் வணங்கி வழிபட்டு பெரும்பேறு பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 

Image may contain: 1 person

No comments:

Post a Comment