PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGAN PATHAM POTRI...GURUVIN PATHARA VINDHANGALE POTRI POTRI...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE RELIEVE YOU FROM ALL THE OBSTACLES & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & PROSPERITY .. " OM MURUGA "


“ மயில் ஏறு செல்வன் மறைசொல்லு முதல்வன் !
மனம் ஈர்க்கும் மேனி மகான் போற்று மானி ! 
அயிற்செங்கை வேலன் அரன் தந்த பாலன் 
அரும்வேத சீலன் குகன்பாதம் போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கே அதிபதியும் .. கலியுகவரதனுமாகிய கார்த்திகேயனை செவ்வாய்க்கிழமையாகிய இன்று துதித்து .. தங்களனைவரது கிரகதோஷங்கள் யாவும் நீங்கி மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழவும் எல்லாம் வல்ல கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
முருகக் கடவுள் .. முழுமுதற்கடவுளான விநாயகரின் இளையவர் .. சிவபார்வதியரின் இரண்டாவது புதல்வர் அழகின் இலக்கணமாகிய இவர் கார்த்திகை நக்ஷ்த்திரத்தில் உதித்தமையால் கார்த்திகேயன் என்றும் .. ஆறுமுகங்களைக் கொண்டதால் ஷண்முகன் என்றும் அன்போடு போற்றப்படுபவர் .. மற்ற தெய்வங்களைப் போலவே முருகனின் உருவமும் முழுமையான தத்துவத்தை உணர்த்துகிறது ..
சாதாரணமக்களாகிய நாம் 
“ ஜாக்ரத் “ எனும் விழிப்பு 
“ ஸ்வப்ன “ எனும் கனவு 
“ ஸுஷுப்தி “ எனும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய நிலைகளிலேயே உழல்கிறோம் .. இவை மூன்றையும் கடந்த உயரிய நான்காவது நிலையே “ துரிய “ எனப்படும் தெய்வநிலை இந்த நிலையினை தம் வாழ்நாளிலேயே அனுபவிப்பர் இன்று யாருமில்லை .. 
ஆதிசங்கரர் போன்ற மஹாபுருஷர்கள் இத்தகைய தெய்வநிலையினை அனுபவித்தவர்கள் .. ஆனால் இதுவே ஹிந்து தர்மம் போதிக்கும் .. மனிதனின் உண்மையான அடிமுடிவற்ற ஸ்வரூபம் .. இந்த துரிய நிலையினையே முருகனின் திருவுருவம் உணர்த்துகிறது ..
முருகனின் கையில் வேலாயுதம் ஏந்தியுள்ளான் பெரும்பாலான ஹிந்துமத தெய்வங்களின் கைகளில் அழிவிற்கான ஆயுதங்களையே ஏந்தியுள்ளனர் .. இவை நம்மைப் பீடித்திருக்கும் வாஸனைகளாகிய ஆசைகளை அழிக்கவேண்டி உருவகப்படுத்தப்பட்டவை 
வாஸனைகளும் அவற்றால் ஏற்படும் ஆசைகளுமே நம் முதல் தடை .. ஆசையில்லா மனிதன் கடவுளை உணர்கிறான் .. வாஸனைகளுடன் சேர்ந்த கடவுள் மனிதனாகிறான் ..முருகனின் சக்தி ஆயுதமாகிய வேல் இந்த வாஸனைகளை அடியோடு அழிக்கவல்ல சக்தியாக உருவகம் செய்து பிரார்த்திக்கவேண்டும் ..
முருகனின் வாகனம் மயில் .. மயிலானது தன்னுடைய அழகிய தோற்றத்தில் (மற்றவர்களின்) மதிமயங்கச் செய்யவல்லது .. மனிதன் தன்னுடைய உடல் அழகு .. புத்திசாலித்தனம் மற்றும் அலைபாயும் மனது ஆகியவற்றின் மீதே மோகம் கொண்டுள்ளான் என்பதை மயில் உணர்த்துகிறது ..
அவன் தன்னைச்சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியும் .. புரியும் விடயங்களையே சிந்தித்து தன்னை ஒருமனித எல்லைக்குள் அடைத்துக் கொள்கிறான் .. மயிலின் கழுத்தின் உண்மையான நிறம் நீலம் .. நீலநிறம் எல்லையற்ற தன்மையை உருவகப்படுத்துகிறது .. எப்படி மயில் தோகைவிரித்து ஆடுகையில் நம் கவனம் அதனுடைய அழகில் மயங்கி உண்மையான நீலநிறம் புலப்படுவதில்லையோ அதேபோல் மனிதன் புற அழகினில் மயங்கி எல்லையற்றதாகிய தன்னுள் உறையும் ஆத்மா எனும் இறைவனை உணரமுடிவதில்லை ..
தன்னுடைய உடல் .. மன .. புத்தியினால் ஏற்பட்டிருக்கும் அகந்தையை அகற்றி நீலநிறமாகிய மயில்மேல் முருகன் செல்வதைப் போல தன் கவனத்தை உள்திருப்பி ஆன்மாவில் நிலைக்கச் செய்யவேண்டிய கடமையை உணர்த்துவதே மயில் வாகனத்தின் தத்துவம் ..
முருகனின் மயில் வாகனத்தின் காலடியில் கருநாகம் பிடிபட்டிருக்கும் .. நாகம் கொல்லப்படுவதில்லை .. ஆனால் காலடியில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் கருநாகம் உணர்த்துவது -
 ஒருவனுடைய அகந்தை நாகத்தின் விஷம் .. நாகத்தினை எதுவும் செய்வதில்லை ..ஆனால் அது வெளிப்பட்டாலோ அதனால் ஏற்படும் ஆபத்து பேரபாயம் .. அதேபோல் ஒருவருடைய அகந்தை உள்ளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் அதனால் ஏதும் துன்பம் இல்லை .. ஆனால் அதையே வெளிக்காட்டினால் ஆசைகள் ஏற்பட்டு பலவிளைவுகள் ஏற்படும் .. ஆகவே விஷஜந்துவாகிய அகந்தையை காலடியில் போட்டுக்கட்டுப்படுத்தி புற அழகினிலிருந்து கவனத்தை உற்திருப்பினால் மட்டுமே இறைவனை அறியமுடியும் .. என்கிற தத்துவத்தினை உணர்த்துகின்றது ..
முருகனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .


Image may contain: 1 person, standing




No comments:

Post a Comment