நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தசஷ்டி கவசம்தனை அமரரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள்
திங்கட்கிழமையாகிய இன்று சோமவார விரதமும் .. சஷ்டித் திதியும் கூடிவருவது சிறப்பாகும் .. சிவபெருமானையும் .. கந்தப்பெருமானையும் போற்றித் துதித்து இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. துன்பங்கள் நீங்கி .. தங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் வேண்டியபடியே நிறைவேறிடவும் .. எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரஹ்மண்ய ப்ரசோதயாத் !!
மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதமே சஷ்டியாகும் .. கந்தப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்தசஷ்டி விரத விழாவாகும் .. முருகன் குடிகொண்டுள்ள. எல்லா ஆலயங்களிலும் சஷ்டி விரதம் மிகவும் சிறப்பாக மாதந்தோறும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. ஐப்பசியில் வரும் வளர்பிறை சஷ்டியே மஹா கந்தசஷ்டி விரதமாகும் ..
முழுமுதற் கடவுளாக கலியுகக் கந்தப்பெருமான் போற்றப்படுகிறார் .. மனித மனம் விரதத்தின் போது தனித்து .. விழித்து .. பசித்து இருந்து ஆறுவகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மை அடைகின்றது ..
தூய உள்ளம் .. களங்கமற்ற அன்பு .. கனிவான உறவு ..
என்பவற்றிற்கு அத்திவாரமாக கந்தசஷ்டி விரதம் அமைகின்றது ..
கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும் ..
கன்மத்தின் வடிவாகிய சிங்கனையும்
மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும் ..
அசுரசக்திகளையெல்லாம் கலியுகவரதனான பெருமான் அழித்து நீங்காத சக்தியை நிலைநாட்டிய உன்னத நாளே கதசஷ்டியாகும் ..
அசுரசக்திகளின் ஆணவம் .. கண்மம் .. மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான .. காமம் .. கோபம் .. பேராசை .. செருக்கு .. மயக்கம் .. பெருமை ஆகியவைகளை அழித்து முற்றுணர்வு .. வரம்பிலாற்றல் .. தன்வயமுடைமை .. வரம்பின்மை .. இயற்கையுணர்வு .. பேரருள் .. ஆகிய தேவகுணங்களை நிலைநாட்டியதால் கந்தசஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது ..
பகைவனை வெல்வது கந்தசஷ்டி விரதமல்ல .. பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே இந்த விரதத்தின் சிறப்பு ..
சஷ்டித் திதியில் சஷ்டிப்பிரியனை போற்றித் துதித்து சகலநலன்களும் பெறுவோமாக ..
“ ஓம் சரவணபவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment