PANVEL BALAGAN POTRI POTRI...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & A DIVINE MONTHLY SHIVARATRI TOO . MAY THE GLORY OF LORD SHIVA UPLIFT YOUR SOUL & MAY PEACE & HAPPINESS SURROUND YOU WITH HIS ETERNAL LOVE & STRENGTH .. " OM NAMASHIVAAYA "


” வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி ! 
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி !
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ! 
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி ! 
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி ! 
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி ! 
கயிலைமலையானே போற்றி ! போற்றி “ 
(திருநாவிக்கரசர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையும் தேய்பிறை சதுர்த்தசித் திதியுமாகிய இன்று சர்வேஸ்வரனுக்கு உகந்த மாதசிவராத்திரியும் கூடிவருவது சிறப்பே ! இந்நாளில் சிவனைப் பணிவோம் ! சீரான வாழ்வும் .. செல்வ வளமும் தங்களனைவருக்கும் தந்தருள்வானாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பாவவினைகளால் உண்டான பிணி .. தடை .. தோஷம் பாவங்கள் .. கர்மவினைகள் .. மரணபயம் .. எமபயம் போன்றவை நீங்கிட விரதங்கள் .. வழிபாடுகள் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது .. அந்தவகையில் சிவனுக்கு உகந்த சிவராத்திரி மிக முக்கிய விரதநாளாகும் ..
பஞ்சராத்திரிகள் - சிவனுக்குரிய ராத்திரிகள் -
நித்ய சிவராத்திரி 
பட்ச சிவராத்திரி 
மாத சிவராத்திரி 
யோக சிவராத்திரி 
மஹாசிவராத்திரி 
என ஐந்துவகைப்படும் .. மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பாள் சிவனை வணங்கி பூஜித்ததால் மஹாசிவராத்திரி என பெயர் பெற்றது ..
அகில உலகமும் பெருங்கடல் மூடிப் பிரளயம் ஏற்படும் ஊழிக்காலத்தில் சகல ஜீவராசிகளும் எம் ஐயனின் காலடியில் ஒடுங்குகின்றன .. அப்போது கங்காளராய் எம் ஐயன் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க 
” ஓம் “ என்னும் பிரணவத்தை நல்வீணையில் வாசித்துக்கொண்டு இருப்பார் .. இதை அப்பர்பெருமான் தம் பதிகத்தில் இவ்வாறு பாடுகின்றார் ..
“ பெருங்கடல் மூடிப் பிரளயங்கொண்டு பிரமனும் போய் இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் கபேளரமும் கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய் வருங்கடல் மிளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே “
அந்த பிரளயகாலத்தில் எம் அம்மை பார்வதி உயிர்களுக்கு இரங்கி தவம்கிடந்து இறைவனை பூஜைசெய்த இரவே “ மஹாசிவராத்திரி “ ஆகும் .. பின்னர் படைப்பு தொடங்கிய பின் இந்நாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் எல்லா நன்மைகளையும் வழங்கவேண்டும் என்ற அம்மையின் வேண்டுகோளுக்கிணங்கி சிவராத்திரி நன்னாளில் சிவனை வழிபடுபவர்களுக்கு இம்மையிலும் எல்லா சுகங்களையும் அளிப்பதுடன் வீடுபேற்றையும் அருளுகின்றார் ..
மாதொருபாகனான எம்பெருமானையும் அன்னை பார்வதியையும் போற்றி அவர்களது அருட்கடாக்ஷ்த்திற்கும் பாத்திரமாவோமாக ! 
“ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 



No comments:

Post a Comment