PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA..GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS - WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & PROSPERITY .. " OM MURUGA "



” கார்த்திகை பாலனே ! கார்த்திகேயனே !
அழகிய வள்ளி நேசா !பெருமைகள் வழங்கி நாளும்
பிறர் போற்றும் வாழ்க்கை ஏற்க குருதிசை நடக்கும் நேரம் குமரனை வணங்குகின்றோம் ! திருவருள் தருவதோடு செல்வாக்கும் அருளுவாயே “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள்
குருவாரமும் .. கிருத்திகை நட்சத்திரமும் கூடிய இந்நாளில் முருகப்பெருமானைத் துதித்து தங்கள் இன்னல்கள் யாவும் களைந்து .. கல்வியில் சிறந்து விளங்கவும் .. குறைவற்ற செல்வம் மற்றும் நல்லாரோக்கியமும் பெற்றிடவும் முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வரபுத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!

அமாவாசைத் திதியுமாகிய இன்று மறைந்த நம் முன்னோர்களை நினைந்து பிதுர்தர்ப்பணம் செய்வது சாலச்சிறந்தது ..
மாதாமாதம் வரும் கார்த்திகையை மாதக் கார்த்திகை மற்றும் கிருத்திகை விரதம் .. நட்சத்திர விரதம் என்றும் அழைப்பார்கள் .. இந்நாளில் விரதம் இருப்பவர்களுக்கு குறைகள் நீங்கி நல்வாழ்வும் .. முக்தியும் கிடைக்கப்பெறும் என்று சிவபெருமானே அருளியுள்ளார் ..
வேதகாலத்தில் கிருத்திகை நட்சத்திரமே முதலாவதாக இருந்துள்ளது .. இது ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும் .. கிருத்திகை அக்னியின் நட்சத்திரம் என்றும் அதுவே நட்சத்திரங்களுக்குள் முகம் போன்றது என்றும் வேதம் கூறுகிறது .. மற்ற நட்சத்திரங்கள் ஒன்று .. இரண்டு .. மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டமாகும் .. ஆனால் கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானும் .. அவன் வம்ச பரம்பரையினரும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் ..
இவ்வளவு பெருமை வாய்ந்தது கிருத்திகை நட்சத்திரம் என்றாலும் இதற்கு முதன்மை தரப்பட்டதற்கும் ஒருகாரணம் உண்டு ,.. இந்த கிருத்திகைகள் கிழக்கு திசைகளிலிருந்து விலகிச் செல்வதில்லை .. மற்றவைகளோ கிழக்கிலிருந்து விலகிச்செல்கின்றன ..
எனவே வேதகாலத்தில் காலநிர்ணயம் செய்வதற்குக் கிருத்திகை மூலகாரணமாக உள்ளது ..

“ வாயாரப்பாடி ! மனதார நினைத்து
வணங்கிடவே ! எந்தன் வாழ்நாளின் இன்பம்! தூயமுருகா ! மாயோன் மருகா ! உன்னைத் தொழுவ தொன்றே இங்கு யான்பெற்ற இன்பம் ..
” ஓம் சரவணபவாய நமஹ் “
வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment