PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGAN SARAN POTRI...GURUVIN PATHARA VINDHANGALE POTRI POTRI..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA LAKSHMI .. MAY SHE GUIDES YOU FROM DARKNESS INTO THE LIGHT BY ELEVATES YOU TO A HIGHER STATE OF BEING AND LIVING .. " JAI MATA DI "




” எத்தனை ஜென்மங்கள் கடந்தேனே ! 
இன்னும் எத்தனை ஜென்மத்தைக் கடப்பேனோ !
எத்தனை ஆனாலும் எமக்கென்ன மனக்கவலை ..?
ஸ்ரீமஹாலக்ஷ்மி நீயிருக்க ! ஏழுகோடி ஜென்மமும் சுகமே ! ஏழேழு கோடியும் வரமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களகரமான வெள்ளிக்கிழமையாகிய இன்று அலைமகளாம் மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவரது இல்லங்களிலும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் என்றும் குறையாது நீக்கமற நிறைந்திருக்க அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !!
மூன்றுவேதங்களின் ஸ்வரூபிணியும் .. மூவுலகத்துக்கு தாயுமான மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரங்களினால் துதிப்பவர்கள் இவ்வுலகில் எல்லாக் குணங்களாலும் நிறைந்தவர்களாகவும் .. மிகுந்த பாக்கியசாலிகளாகவும் .. புத்தி .. சக்தி உள்ளவர்களாகவும் ஆகின்றனர் ..
ஸ்ரீமஹாலக்ஷ்மிதேவியை ஐஸ்வர்யத்தின் வடிவாகவழிபட்டு அஷ்ட ஐஸ்வர்யங்கள் என்கிற எட்டுவாழ்க்கை நலன்களையும் பெறலாம் .. 
“ செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன் “ என்று பாரதியார் தன் பாடலில் திருமகளைப் போற்றிப்பாடியுள்ளார் .. அஷ்டலக்ஷ்மியும் .. நவநிதியும் பெற்று பத்துத்திக்கும் வசமாகி வளமுடன் வாழ செல்வத்திருமகள் அருள்பொழிகிறாள் .. என்றும் எங்கும் தன் அருட்பார்வையால் வீசும் அன்னை மஹாலக்ஷ்மியான ஸ்ரீதேவியே அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தேவதை ..
உலகிலுள்ள அனைத்து செல்வங்களும் மஹாலக்ஷ்மியின் வடிவங்களே ஆகும் .. அவளே விளைபொடுட்களில் - தான்யலக்ஷ்மியாகவும் .. 
வீரர்களிடம் - தைரியலக்ஷ்மியாகவும் ..
பசுக்கூட்டத்தில் - கோலக்ஷ்மியாகவும் திகழ்வதாகக் கூறுவர் ..
“ நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே !
ஸங்கசக்கரகதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே “
பொருள் - மஹாமாயையும் ஸ்ரீபீடத்தில் வசிப்பவளும் .. தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும் சங்கு .. சக்கரம் .. அதை ஆகியவற்றை ஏந்தியவளுமான மஹாலக்ஷ்மி தேவியே ! உன்னை வணங்குகிறேன் “
உள்ளம் உருக அன்னையைப் போற்றித் துதித்து தங்கள் உள்ளத்திலும் .. இல்லத்திலும் குடியேறி நீங்காதிருந்து வளம் பெருக வரம் தந்தருள்வாளாக !
“ ஓம் மஹாலக்ஷ்மியே ! நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
 Image may contain: 1 person

No comments:

Post a Comment