PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

swami saranam guruve saranam....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD HANUMAN .. MAY HE BLESS YOU WITH STRENGTH .. ENERGY & MAY HE GIVES YOU ABUNDANT & POWERS TO CONQUER EVIL SPIRITS .. " JAI SHREE RAM ! JAI SHREE HANUMAN


” அசுரர்களை எளிதாக வதம் செய்யும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் உயிருக்கு உயிரான ஆஞ்சநேயரை வணங்குகிறேன் ! கருணை நிறைந்தவரே ! பயத்தைப் போக்குகிறவரே ! பகைவர்களை நாசம் செய்பவரே ! அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தருபவரே ! உமக்கு நமஸ்காரம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
எவ்விதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் தூய அன்புடனும் .. பக்தியுடனும் ஸ்ரீராமனுக்கு தொண்டு செய்த தன்னலமற்ற ஸ்ரீஆஞ்சநேயரை சனிக்கிழமையாகிய இன்று துதித்து தங்களது அனைத்து காரியங்களிலும் வெற்றியும் .. உடல்வலிமை .. நல்லாரோக்கியம் .. வாக்குசாதூர்யம் புகழ் .. மற்றும் அமைதியான வாழ்வும் அமைந்திட வாயுபுத்திரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ! 
ராமதூதாய தீமஹி ! 
தந்நோ அனுமன் ப்ரசோதயாத் !!
புராணங்கள் அனுமனை சிவனின் ருத்ர அவதாரம் எனச்சொல்கிறது .. வானரரூபம் பெற்ற அப்சரப் பெண் அஞ்சனை .. வானர வீரர் கேசரியை மணந்து பிள்ளைவரம் வேண்டி தவம் செய்தாள் .. தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் எழுந்த புனிதபாயாசத்தை பருந்து கொத்திக்கொண்டுபோக .. அது நழுவிக்கீழேவிழ .. வாயுபகவான் அதை அஞ்சனையின் விரிந்தகைகளில் விழச்செய்ய அதை உண்டு பிறந்தவர் அனுமான் ..
எதிரிகளிடையே பயத்தை உண்டு பண்ணக்கூடிய சக்தி .
நம்பியவர்கள் பயம்விலகும் பிரம்மாஸ்திரம் ஒன்றும் செய்யாது என்று பிரம்மனும் .. 
கடலைகடக்கும் சக்தியை சிவனும் ..
வஜ்ராயுதத்தைவிட வலிமையான உடல் என இந்திரனும் ..
தண்ணீரில் எந்த ஆபத்துமில்லை என வருணனும் .. நெருப்பு ஒன்றும் செய்யாது என அக்னியும் .. 
நோயற்ற நீண்டவாழ்வை எமனும் .. 
தன்னால் உருவாக்கப்பட்ட எந்த ஆயுதத்தினாலும் சேதமில்லை என விஷ்வகர்மாவும் .. 
திருப்தியான மனதையும் .. மகிழ்ச்சியையும் குபேரனும் .. 
தன்னைவிட வேகமாக செல்லும் வரத்தை வாயுவிடமிருந்தும் பெற்றவர் அஞ்சனை மைந்தன் ..
அனைத்தும் கற்ற சூரியனை தமது குருவாகக் கொண்டவர் .. அவரிடமிருந்து அணிமா .. லஹிமா .. கரிமா சித்திகளைக் கற்றவர் .. ராமபிரானின்மீது கொண்ட அன்பை நம்பாதவர்களுக்கு தன் நெஞ்சைப் பிளந்து காட்டி அதில் ராமரும் சீதையும் கொலுவிருப்பதை காட்டியவர் ..
எந்நேரமும் தன்னை மறந்து ஸ்ரீராம தியானத்தில் இருக்கும் அனுமானுக்கு தன்னை துதிப்பதைவிட தனது இறைவன் ஸ்ரீராமனைத் துதிப்பதே பிடிக்கும் .. எனவே அனுமனைப் பூஜித்து தங்களால் முடிந்தளவு 
” ஸ்ரீராம் ! ஜெயராம் ! ஜெய ஜெய ராம் “ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள் .. அல்லது கண்மூடி தியானித்து “ ராம் ! ராம் “ என்று சொன்னாலே போதும் அனுமானுக்கு இதைவிட பிரியமானது வேறெதுவுமில்லை ..
சொல்லில் அடங்கா புகழவன் ! சொல்லின் செல்வனைப் போற்றுவோம் ! வாழ்வில் நலம் பல பெறுவோமாக ! ஜெய் ஸ்ரீராம் ! ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
 Image may contain: 1 person

No comments:

Post a Comment