PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGANE POTRI POTRI....GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE THIRUVADIRAI STAR TOO .. MAY LORD SHIVA FULFILL ALL YOUR DESIRES & REMOVE ALL SINS & PAINS & NEGATIVE FORCES FROM YOUR LIFE " OM NAMASHIVAAYA "



கண்ணீர் வழிந்து கன்னத்தில் கோடிடும்
கால்கள் உன் சந்நிதி நாடி வரும்
கைகள் இரண்டுமே கூப்பிய தாமரையாய்
தொழுதேற்றி உனை வணங்க
மனமோ நீ அமர்ந்த மாளிகையாய்
பேருவகை கொண்டு ஆர்ப்பரிக்க
எண்ணம் யாவும் மாலையாய்த் தொடுத்து
பாலகன்  உனக்கே சாற்ற ஆவலாய்
வண்ணம் இல்லா வாழ்க்கையை
வானவில்லாய் மாற்றித் தந்த
எங்கள் குரு பன்வேலில் அமர்திருந்து
உனக்கு தினசரி பூஜை செய்து
உவப்புடன் எமக்கு அளிக்க
அதுவே என் நோய் தீர்க்கும் அருமருந்தாய் இருக்க
உன் கரமோ அடியவர்க்கருளும் சுனையாய் ஊற்றெடுக்க
அடியவர் உன் லீலைகள் கண்டு மகிழ்ந்திருக்க
சபரியோ உன்  அடியவர் கூடும் தலமாய்த் துலங்குதே

No comments:

Post a Comment