” உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறி நிறுவி யுறுதியாகத் தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட்பாசக் கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு பொழிச்சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஓம் எனும் மூலமந்திரத்திற்கு அதிபதியும் .. பூதகணங்களுக்குத் தலைவனாக விளங்குபவரும் .. இடையூறுகளை இல்லாது செய்பவருமாகிய விக்னவிநாயகரை சதுர்த்தித் திதியாகிய இன்று துதித்து இன்பங்கள் யாவும் தங்கள் இல்லம் வந்து சேரவும் .. அனைத்து துன்பங்களும் தூர விலகி ஓடவும்
விக்னேஷ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
விக்னேஷ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
“ சதுரம் “ என்றால் நான்கு பக்கங்களும் பூர்த்தியாகிய அமைப்பாகும் ... எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக நாம் “ சதுர்த்தி விரதம் “ மேற்கொள்ள வேண்டும் ..
விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் .. மற்றும் வெள்ளிக்கிழமையாகும் .. திதிகளில் சதுர்த்தித் திதி உகந்ததாகும் .. அவருக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் அர்த்தம் இருக்கின்றது ..
1 - மோதகம் - படைப்பதற்கு காரணம் -
“ மோதும் அகங்கள் “ இருக்கக்கூடாது .. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் .. குடும்பத்தில் சண்டை .. சச்சரவுகள் ஏற்படாமல் இருக்கவே மோதகத்தைப் படைக்கின்றோம் ..
“ மோதும் அகங்கள் “ இருக்கக்கூடாது .. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் .. குடும்பத்தில் சண்டை .. சச்சரவுகள் ஏற்படாமல் இருக்கவே மோதகத்தைப் படைக்கின்றோம் ..
2 - சிதறுதேங்காய் - துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்கவேண்டும் ..
3 - பழங்கள் - கொய்யாப்பழம் என்றாலும் அது மரத்திலிருந்து கொய்தபழம்தான் .. விளாம்பழம் என்றாலும் அது விழுந்த பழம்தான் .. கடினமான ஓட்டிற்குள் இனிய கனியிருக்கும் .. கடினமான உழைப்பிற்குப் பிறகு கனிவான வாழ்க்கை இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றது ..
4 - அவல் - குசேலனை குபேரனாக்கிய பொருளாகும் .. எனவே அவல் .. பொரிகடலை ஆனைமுகனுக்கு கொடுத்து கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை கிட்டும் .. மக்கள்போற்றும் செல்வாக்கும் வந்து சேரும் ..
5 - அருகம்புல் - அருகம்புல் மாலையிட்டு எள்ளுருண்டை நிவேதனம் செய்து வழிபட்டு கொண்டாடினால் சனிபகவானின் பாதிப்பிலிருந்து விடுபட இயலும் .. தோப்புக்கரணம் போடுவதால் மூட்டுகள் வலிமை பெற்று ஆரோக்கியத்தை வழங்கும்
எனவேதான் “ வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும் என்றும் .. வெற்றிமுகத்து வேழவனைத் தொழ புத்திமிகுந்து வரும் என்றும் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் ..
சதுர்த்தியாகிய இன்று விநாயகரை பூவணிந்தும் .. பாவணிந்தும் வழிபாடு செய்யுங்கள் .. அகிலம் போற்றும் வாழ்க்கை அமையும் ..
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment