PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE PANJAMI THITHI TOO .. MAY GODDESS MAA VARAAHI PROTECT YOU FROM ALL EVIL & NEGATIVE FORCES FROM YOUR LIFE & GUIDE YOU ALONG THE RIGHT PATH FOR A SUCCESSFUL LIFE .. " JAI MAA VARAAHI DEVI "



 ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற 
அரியபச்சை மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு (ம்) மலர்க்கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே வையம் துதிக்க வருவாள் வராஹி மலர்க்கொடியே “ 
(வீரை கவிராசபண்டிதர் - 16ம் நூற்றாண்டு)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
செவ்வாய்க்கிழமையாகிய இன்று அன்னை வராஹி தேவிக்கு உகந்த வளர்பிறை பஞ்ச்மித் திதியும் கூடிவருவது சிறப்பு .. அன்னையைத் துதித்து தங்கள் எண்ணங்கள் யாவும் எண்ணியபடியே ஈடேறவும் .. வாக்குபலிதம் .. மனவலிமை பெற்றிடவும் அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஸ்யாமளாயே வித்மஹே ! 
ஹலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !!
வராஹி அம்மனின் நாமத்தைக் கேட்டாலே பலருக்கு பயம் வரும் .. அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராஹி ! சப்தகன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள் .. இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்குச் சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர் ..
வராஹி பக்தர்களுக்கே பக்கத்துணை .. ஆனால் பகைவருக்கோ பெரு நெருப்பு ! பயம் .. கவலை .. நடுக்கம் .. எதிர்ப்பு என்று நினைத்து நினைத்து கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புத அன்னையே வராஹி !
ஸ்ரீவராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை .. தைரியம் தருவதோடு எதிர்ப்புகள் .. எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் ஓர் கவசமுமாகும் .. அபிச்சாரம் எனப்படும் பில்லி .. சூனியம் .. ஏவல்களை நீக்குபவள் .. எதிரிகளின் வாக்கை அவர்கள் செய்யும் தீவினைகளை ஸ்தம்பிதம் செய்பவள் .. வழக்குகளில் வெற்றி தருபவள் ..
மந்திரசாஸ்திரமொழி - ” வராஹிக்காரனோடு வாதாடாதே “ என்பதாகும் ..
ஸ்ரீவராஹி எலும்பின் அதிதேவதை .. இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும் .. வாத .. பித்த .. வியாதிகளும் தீரும் ..
விவசாயம் சம்பந்தமான தொழில்கள் மேம்பாடு அடைய ஏர் கலப்பையும் .. உலக்கையும் ஏந்தியவள் ..
ஸ்ரீவராஹி அம்மனை ஒருமனதோடு தர்மசிந்தனையிலும் வழிபட்டு வாழ்வில் எல்லாவகையிலும் வெற்றி காண்போமாக ! வெற்றி நிச்சயம் ! 
“ ஓம் கருணாசாகரி ! ஸ்ரீமஹாவராஹி ! பத்மபாதம் நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment