SWAMY SARANAM...GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & A DIVINE SHASHTI THITHI TOO .. MAY LORD MURUGA REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA "

” கதம்பமும் முல்லை மல்லி 
கனிவுடன் சூடும் கந்தா ! சதமென ஆயுள் நல்கி 
சகலமும் அருளுவாயே !புதன்திசை நடக்கும் நேரம்
போற்றி நாம் வணங்குகின்றோம் ! 
இதம் தரும் வாழ்வை நல்கி இன்பத்தை வழங்குவாயே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டித் திதியாகிய இன்று கந்தப்பெருமானைப் போற்றித் துதித்து மனநலமும் .. உடல்நலமும் .. நல்லாரோக்கியத்துடன் திகழவும் .. வல்வினை நீக்கி வரும்வினைபோக்கி .. செல்வமும் செல்வாக்கும் தங்களனைவருக்கும் தந்தருளும்படி 
கந்தவேலவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
முருகனுக்கு உகந்தநாள் சஷ்டி .. 
சஷ்டி என்றால் - ஆறு .. 
 முருகனுக்கு முகங்கள் - ஆறு 
முருகனின் படைவீடுகள் - ஆறு 
முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு .. 
“ சரவணபவ என்ற முருகனின் மந்திரம் ஆறெழுத்து
ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம் .. கடன் .. ரோகம் .. சத்ரு போன்றவற்றைக் குறிக்கும் .. இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே !
“இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை 
அறுவேறு வகையில் அஞ்சுவரமண்டி 
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ் இணர்
மாமுதல் தடித்த மறு இல் கொற்றத்து எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்.”
- நக்கீரர் -
பொருள் - மனித உடலும் .. விலங்கின் உடலும் இணைந்து உருவெடுத்த அசுரனாகிய பெரியசூரனை அவன் அஞ்சும் வண்ணம் சென்று ஆறுவேறு வடிவங்கள் தாங்கி நின்று அசுரர்களுடைய கொட்டம் அழியும்படியாக கவிழ்ந்திருக்கும் கொத்துக்களையுடைய மாமரத்தின் வடிவாக அசுரன் உருமாறி நின்றபோது அதன் அடிமரத்தைப் 
பிளந்த குற்றமில்லாத வெற்றியையுடைய அறியமுடியாத பேரறிவையும் .. பெரும் புகழையும் உடைய செவ்வேலையுடைய அழகன் முருகன் ..
சிறப்புவாய்ந்த கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து அறிவு .. செல்வம் .. சந்தானம் .. வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக்கேட்டாலும் கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்திவாய்ந்த கவசமாகும் ..
மனம் உருகி கந்தசஷ்டி கவசத்தை சஷ்டித்திதிகளில் பாராயணம் செய்து முருகனின் அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

Image may contain: 6 people, people standing

No comments:

Post a Comment