சீரியன் மனத்துள் வேண்டும் !
சித்தி தந்து அளித்துச் செய்யும் பாரியல் கருமம் கூட்டிப்
பரவு மெய்ஞான வாழ்வு மேரியல் செல்வப் பேறும் யாவையும் ஒருங்கு நல்கும் தெரியல் அறிஞன் தேவர்
தேசிகன் திருத்தாள் போற்றி “
சித்தி தந்து அளித்துச் செய்யும் பாரியல் கருமம் கூட்டிப்
பரவு மெய்ஞான வாழ்வு மேரியல் செல்வப் பேறும் யாவையும் ஒருங்கு நல்கும் தெரியல் அறிஞன் தேவர்
தேசிகன் திருத்தாள் போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிவரும் வியாழக்கிழமையாகிய இந்நாளில் வாக்கிற்கும் .. அறிவுக்கும் அதிதேவதையான குணமிகு வியாழகுருபகவானைப் போற்றித் துதித்து கிரகதோஷங்கள் யாவும் நீங்கப்பெற்று செல்வம் .. செல்வாக்கு .. புகழ் மற்றும் வியாபாரத்தில் அதீத லாபமும் பெற்றிட பிரஹஸ்பதியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே !
க்ருணி ஹஸ்தாய தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !!
க்ருணி ஹஸ்தாய தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !!
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாய் .. அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய் .. பிரம்மமாய் .. ஜோதிப்பிளம்பான இறைவன் படைப்பிலடங்கிய ஜீவராசிகள் அனைத்தும் தத்தமது முன்வினைகளுக்கேற்ப சுகங்களையும் .. துக்கங்களையும் அனுபவித்து வருவது கண்கூடு ..
ஜீவராசிகளின் முன்வினைகளுக்கேற்ப சுக துக்கங்களை அதன் பலாபலன்களை இறைவன் ஆகர்ஷண சக்தியினால் பூமியுடன் தொடர்புகொண்டுள்ள கிரகங்களின் மூலமாக நமக்கு அளித்து வருகிறார் ..
ஒருவருடைய கிரகதோஷம் குருபகவானின் அருட்பார்வையினால் விலகுகிறது எனில் அதனையே “ குருபார்க்க கோடி நன்மை “ என்று சாஸ்திரமறிந்தவர்கள் கூறுவதுண்டு .. சுபக்கிரகமாக விளங்குபவர் குருபகவான் .. ஒருவர் வாழ்வில் சிறப்புகள் பெறவேண்டுமெனில் அவரின் அருட்பார்வை நிறைந்திடவேண்டும் ..
இந்திரசபையில் வீற்றிருக்கும் இவர் கல்வியில் சிறந்தவர் .. நுண்ணறிவு மிகுந்தவர் .. சாத்வீக குணம் மிகுந்தவர் .. மங்களமே வடிவானவர் .. தன்னைப் பணிந்து வழிபடும் அடியவர்களுக்கு அவரவர் வேண்டும் வரங்களைத் தந்து .. குற்றங்களைக் களைந்து ஆபத்துக்களைப் போக்கி நோய் நொடிகளை அகற்றி வேண்டிய செல்வங்களையும் தந்தருள்பவர் ..
குருவைப் போற்றுவோம் ! குருபார்வைப் பெற்று சகலதோஷங்களும் நீங்கப்பெறுவோமாக !
“ ஓம் ஸ்ரீகுருபகவானே ! போற்றி ! போற்றி “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் ஸ்ரீகுருபகவானே ! போற்றி ! போற்றி “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment