” பைங்கண்வாள் அரவணை யவனெடு
பனிமல ரோனுங் காணா அங்கணா அருளென அவரவர்
முறை முறை யிறைஞ்ச நின்றார் சங்க நான் மறையவர் நிறைதீர அரிவையர் ஆடல்பேணத் திங்கள் நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர் தாமே”
பனிமல ரோனுங் காணா அங்கணா அருளென அவரவர்
முறை முறை யிறைஞ்ச நின்றார் சங்க நான் மறையவர் நிறைதீர அரிவையர் ஆடல்பேணத் திங்கள் நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர் தாமே”
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சோகங்களைப் போக்கி சுகங்களைத் தரவல்ல சிவபிரானுக்கு உகந்த சோமவார விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. பாவங்களைக் களைந்து வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் என்றும் நிலைத்திடவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
திங்கட்கிழமைகள் சிவ வழிபாட்டிற்கு உகந்தவை .. இந்நாட்களில் குடும்ப சமேதராக கோவிலுக்கு சென்றால் அந்தக் குடும்பம் எந்தவகையிலும் பிரியாமல் இருக்கும் என்பது ஐதீகம் .. குறிப்பாக கார்த்திகைமாத திங்களன்று கணவனும் மனைவியும் இணைந்து கோவிலுக்குச் சென்று வருவது காலமெல்லாம் அவர்கள் கருத்து வேறுபாடின்றி இணைந்திருக்க வகை செய்யும் ..
சந்திரனுக்குரிய கிழமை திங்கள் .. பிறை நிலவை சிவபெருமான் அழகாக தலையில் அணிந்துள்ளார் .. சந்திரனுக்கு ”சோமன்” என்ற பெயருண்டு .. அதனால் சோமனை சூடிய சிவன் “ சோமசுந்தரர் “ என்றழைக்கப்படுகிறார் .. திங்களை முடியில் சூடியவர் என்பதாலும் சிவ வழிபாட்டில் திங்கட்கிழமைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது ..
தட்சனால் அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன் சாபம் காரணமாக நாளுக்கு நாள் தேய்ந்து ஒளியிழந்தான் இரவுவேளையில் உலகமும் இருள்மயமானது .. தன் சாபம் நீங்க சந்திரன் திங்கட்கிழமைகளில் சிவ வழிபாடு செய்து மேன்மை பெற்றான் .. இதனால் மகிழ்ந்த சிவன் சந்திரனுக்கு மீண்டும் ஒளியைக் கொடுத்தார் ..
அதன் பிறகும் சந்திரனின் செருக்கு அடங்கவில்லை ஒருசமயம் குள்ளவடிவமும் யானைமுகமும் கொண்ட விநாயகரை சந்திரன் கேலிசெய்ய விநாயகரின் சாபத்துக்கு ஆளாகி ஒளியிழந்தான் .. மீண்டும் சிவ வழிபாடு செய்த சந்திரன் சிவனுக்கு 108 சங்குகளில் தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்தான் .. எனவே சந்திரன் முன் தோன்றிய சிவன் ஒருவர் செய்யும் தவறை ஒருமுறை மன்னிக்கலாம் .. மறுபடியும் மன்னிக்க இயலாது .. இருப்பினும் என்னை அபிஷேகித்து வழிபட்டதால் ஒருபட்சம் வளர்ந்தும் .. ஒருபட்சம் தேய்ந்தும் போவாயாக ! இதில் ஒருநாள் முழுமையாக மறைந்தும் .. ஒருநாள் முழுமையாக ஒளிரவும் செய்வாய் என்றார் .. அத்தோடு அவரது தலையில் ஒளிவீசும் பாக்கியத்தை தந்தருளவேண்டும் என சந்திரன் வேண்டிக் கொண்டதால் அந்த வரத்தையும் நல்கினார் ..
இப்போதும் ஒற்றுமையில்லாத பல தம்பதியினர் உள்ளனர் .. அவர்களும் பழம் .. பால் மட்டும் சாப்பிட்டு சிவாலயத்துக்கு சென்று வரவேண்டும் .. இரவில் எளிய உணவு உண்ணலாம் .. இந்நாளில் தம்பதி சமேதராக சிவாலயம் சென்று சுவாமி .. அம்பாளை வணங்கிவர .. சிவசக்தியின் ஆசியால் காலம் முழுவதும் ஒற்றுமையாக வாழ்வர் ..
சிவனைப் போற்றுவோம் ! சகல நலன்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment