PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM.. URUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE " YOGINI EKADASHI " TOO PEOPLE WHOEVER OBSERVE FAST ON THIS DAY WILL BE ABLE TO CLEAR THEIR PROBLEMS IN A SUCCESSFUL MANNER WITH THEIR PAST SINS CLEANSED .. IT IS POSSIBLE TO LEAD A NORMAL LIFE WITHOUT EXPERIENCING ANY PROBLEMS AGAIN .. " OM NAMO NAARAAYANAAYA "




” அள்ளிக்கொண்ட அழகில் அகண்ட காவிரியில் பள்ளிகொண்டான் பெருமாள் ! அலைகடல் ஓரம் அணங்கினை மீட்க அயந்தது தர்ப்பசயனத்திலோ ! 
தளைதனில் இருந்து பக்தனைக் காக்க சாய்ந்தது சர்ப்பசயனத்திலோ “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று பகவான் மஹாவிஷ்ணுவுக்கு உகந்த ஏகாதசித் திதியும் கூடிவருவது சிறப்பு .. இன்றைய ஏகாதசித் திதியை “ யோகினி ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. அறிந்தோ அறியாமலோ செய்த அனைத்து பாபங்களிலிருந்தும் .. சாபங்களிலிருந்தும் விடுதலைப் பெற்று மஹாவிஷ்ணுவின் அருளுக்கு பாத்திரமாகி எல்லா நலன்களையும் பெறுவீர்களாக
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசித் திதியை (தேய்பிறை) “ யோகினி ஏகாதசியாக “ அனுஷ்டிக்கின்றனர் .. இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதன் பலனாக அவரவரது பாவத்தின் பிரதிபலன்கள் யாவும் அழிந்து மேலான முக்தியைப் பெறுவர் ..
எடுத்த பணியை சிரத்தையுடனும் .. பக்தியுடனும் கவனத்துடனும் செய்யவேண்டும் .. பூஜைமுதலான தெய்வகாரியங்களில் சோம்பேறித்தனத்தையும் .. அக்கறையின்மையும் விட்டுவிட்டு மனதில் எப்பொழுதும் கட்டுப்பாட்டுடனும் சதாசர்வகாலமும் ஈஸ்வர சிந்தனையுடன் இருக்கவேண்டும் ..
கலியுகத்தில் கர்மவினையினால் ஏற்படும் வெண்குஷ்டம் போன்ற கொடிய ரோகங்களிலிருந்தும் விடுபட யோகினி ஏகாதசி நாளில் பக்தி சிரத்தையுடன் பகவானின் நாமஸ்மரணையுடன் உபவாசமிருந்து வழிபட அனைத்து ரோகங்களிலிருந்தும் நிவாரணம் கிட்டும்
புராணவரலாறு - 
குபேரன் சிவபூஜை செய்யும்போது அவருக்கு பூக்களைக் கொண்டுவரும் வேலையை ஹேமமாலி என்பவன் செய்து வந்தான் .. மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்ட ஹேமமாலி தனக்கு இட்ட வேலையையும் .. கடமையையும் மறந்து மனிவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்ததால் குபேரனின் பூஜைக்கு மலர்களைக் கொண்டு சேர்க்க முடியவில்லை ..
பூஜையின்போது மலர்கள் இல்லாததைக் கண்ட குபேரன் கோபத்தில் தவறு செய்த ஹேமமாலிக்குப் பதினெட்டுவிதமான குஷ்டரோகங்கள் வரட்டும் என்று சபித்தான் ..
ஹேமமாலியைக் குஷ்டரோகம் பிடித்து வாட்டவே அவனது மனைவி விசாலாட்சியுடன் மேருமலைக்குச் சென்று அங்கே தவம்செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரின் திருவடிகளில் வீழுந்தார்கள் .. அவரும் “ யோகினி ஏகாதசியை “ அவர்களுக்கு உபதேசித்தார் .. அதன்படியே விரதமிருந்து மஹாவிஷ்ணுவைப் பூஜித்த ஹேமமாலி நோய் நீங்கப்பெற்று தன் உருவை மீண்டும் பெற்றான்
யோகினி ஏகாதசி ஒருவரின் எல்லா பாவங்களையும் அழித்து மிகுந்த தெய்வபக்தியைக் கொடுக்கிறது ..
பகவானைப் போற்றுவோம் ! வாழ்வில் நலம்பல பெறுவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
 Image may contain: 1 person, standing and text

No comments:

Post a Comment