PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL BLESSED WEDNESDAY & A DIVINE " PRADOSHA VIRADAM " TOO .. PRADOSHA TIMES ARE THE WINDOWS OF OPPORTUNITY TO REMOVE KARMA OR KARMIC ENERGIES THAT LIMIT US FROM ENJOYING UNLIMITED POTENTIALS IN THIS CURRENT LIFE .. BE IN A MEDITATIVE STATE OF MIND DURING PRADOSHA TIME ( EVENING 4.30 - 6.00 ) & CHANT THE POWERFUL MANTRA " OM NAMASHIVAAYA " & PARTICIPATE IN THE PRADOSHA RITUALS & REMOVE ALL YOUR NEGATIVE KARMA BY RECEIVING THE BLESSINGS OF LORD SHIVA .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH ..


" கைலாசவாசா ! கங்காதரா ! ஆனந்தத் தாண்டவ சதாசிவா ! ஹிமகிரி வாசா ! சாம்பசிவா ! கணபதி சேவித்ஹே பரமேசா ! சரவண சேவித்ஹே ! பரமேசா ! சைலகிரீஸ்வர உமா மஹேசா! நீலலோசன நடனநடேசா ! ஆனந்தத்தாண்டவ சதாசிவ ஹிமகிரி வாசா! சாம்பசிவா ! ஓம் நமசிவாய “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஈசனுக்கு உகந்த பிரதோஷ விரதமும் .. கந்தப்பெருமானுக்கு உகந்த கார்த்திகை விரதமும் கூடிவருவதால் இந்நாள் ஓர் சிறப்புமிக்க நன்னாளாக மிளிர்கின்றது .. வைகறைப் பொழுதினில் கந்தனையும் ..சந்தியாவேளையில் ஈசனையும் ஆலயம் சென்று தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இந்நாள் ஓர் இனிய நாளாக அமைந்திடவும் .. சத்ருபயம் நீங்கி வாழ்வில் ஏற்றத்தைக் காணவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பிரதோஷ வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச்சிறப்பான வழிபாடாகும் .. 
தோஷம் என்ற - வடமொழிச்சொல்லிற்கு “ குற்றம் “ என்று பொருள் .. ஆனால் .. 
பிரதோஷம் என்றால் - “ குற்றமற்றது “ என்று பொருளாகும் .. 
 குற்றமற்ற இந்தப்பொழுதில் (மாலை 4.30 - 6.00 மணி) ஈசனை வழிபட்டோமேயானால் நாம் செய்த பாவ வினைகள் மற்றும் துன்பங்களும் நீங்கி இன்பம் பெறலாம் என்பது ஐதீகம் ..
உலகம் ஒடுங்குகிறது .. மனம் ஈஸ்வரனிடம் ஒடுங்க அதுவே நல்ல நேரம் .. பகலின் முடிவு 
சந்தியாகாலத்தின் ஆரம்பம் .. சிருஷ்டி முடிவுபெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கிக்கொள்ளும் நேரம் .. வில்லை விட்டு அம்பு சென்றுவிட்டாலும் .. மந்திர உச்சாரணபலத்தால் அந்த அம்பை உப சம்ஹாரம் செய்வதுபோல் ஈஸ்வரன் தான் விட்ட சக்திகளை எல்லாம் தன் வசப்படுத்திக் கொள்கிறார் ..
“ ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக ! பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனேம்ருது ரவ்யய” 
பிரதோஷவேளையில் இந்த ஸ்லோகத்தை 18 முறை பாராயணம் செய்து பிரதோஷ மூர்த்தியாகிய எம்பெருமான் நம் குற்றம் குறைகளையும் மன்னித்தருள்வாராக !
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment