SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF SHIRDI SAI .. MAY HE REMOVE THE IGNORANCE IF ANY FROM THE MINDS OF HIS DEVOTEES & ENLIGHTEN THEM FOR A HEALTHY & A PROSPEROUS LIFE TOO .. " OM SHREE SAINAATHAAYA NAMAHA "




” சாயி நாமமே தினமும் ஜபித்தோமே ! நொடியிலும் உம்மை யாம் பிரியோமே ! வியாழன் உன்னை பூஜித்தோமே ! தேவா ! உன் கிருபையால் நலம்பல அடைந்தோமே ! ராம .. கிருஷ்ண .. ஹனுமான் ரூபத்திலே அழகு தரிசனம் எமக்களிப்பாயே ! பலமதமுறையில் பூஜித்தும் பக்தர் குறை கேட்டருள் புரிவாயே ! சாயியின் நாமம் வெற்றி நல்கிடுமே ! தேவா ! வெற்றியின் அர்த்தம் நீதானே ! சாயிதாஸனின் ஆரத்திபாடுபவனுமே ! சர்வசுகம் .. சாந்தி .. வளம்பெறுவானே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் குருவருளும் .. இறையருளும் கூடிவரும் வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றித்துதிக்கப்படும் குருநாதருமாகிய 
ஷீரடிபாபாவிற்கு உகந்த நாளுமாகும் .. பாபாவை இதயப்பூர்வமாகத் துதித்து தங்களனைவரது விருப்பங்கள் யாவும் நிறைவேறவும் .. மனநலமும் .. உடல்நலமும் .. நல்லாரோக்கியமாகத் திகழவும் .. பாபாவைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஷீரடி வாஸாய வித்மஹே ! 
சச்சிதானந்தாய தீமஹி ! 
தந்நோ சாய் ப்ரசோதயாத் !!
பொன்மொழிகள் - 
குருவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது .. அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது .. மூவுலகங்களிலும் தேடினாலும் சத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது - ஸ்ரீசாயி ராமாயணம் -
“ சர்வம் சாயிமயம் “ என்ற எண்ணம் உன்னில் இருந்தால் நான் தனியாக எங்கிருக்க முடியும் ..? உன் இதயபீடமே என் இருப்பிடம் ! உனது பிரேமையைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை .. செயல் புரியாதது போல் நான் காணப்படினும் .. ஒருபோதும் உன்னை கவனியாமலிருந்தது இல்லை .. உனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட கடமையைச் செய் .. உன் உடல் .. வாக்கு .. உயிர் முழுவதிலும் நிற்கும் தன்மையுடைய என்னிடம் அர்ப்பணம் செய்யவேண்டும் .. என்னிடம் விசுவாசம் வைப்பது இப்போது உனக்கு மிகவும் அவசியமாகிறது - ஸ்ரீ ஷிர்டிபாபா -
எங்கு பொறுமை .. நம்பிக்கை இரண்டுமே இருக்கின்றனவோ அங்கு நான் சேவகனாக என்றும் இருக்கிறேன் .. சந்தேகமே வேண்டாம் இவ்விரண்டும் இல்லையெனில் நான் என்றுமே எட்டிப்பிடிக்க முடியாதவனாகவே ஆகிறேன் .. (ஷிர்டி சாய்)
ஸ்ரீசாயியின் அமுதமொழிகளை நினைவுகூர்ந்து எப்போதும் நாமஸ்மரணை செய்வீர்களாயின் தங்கள் மனதை வருத்தும் கவலைகள் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும் என்பது சாத்தியமே !

Image may contain: 1 person, sitting

No comments:

Post a Comment